Home /News /entertainment /

‘அட்லீ படம் ரூ. 1000 கோடி வசூல் செய்ய வேண்டும்’ – தொகுப்பாளினி டிடி விருப்பம்

‘அட்லீ படம் ரூ. 1000 கோடி வசூல் செய்ய வேண்டும்’ – தொகுப்பாளினி டிடி விருப்பம்

அட்லீ - திவ்ய தர்ஷினி

அட்லீ - திவ்ய தர்ஷினி

DD on Atlee Movie : ஷாரூக்கானுடன் டிடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

    அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்பம் ரூ. 1000 கோடி வசூல் செய்ய வேண்டும் என்று பிரபல தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி என்ற டிடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

    விஜய் டிவி சீனியர் ஆங்கர் டிடி என்கிற திவ்யதர்ஷினி கடந்த 9ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைப்பெற்ற நயன் - விக்கி கல்யாணத்தில் கலந்து கொண்டார். மகாபலிபுரத்தில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைப்பெற்றது. அப்போது டிடி காரில் திருமணத்திற்கு வந்த புகைப்படங்கள் ஏற்கெனவே வெளியாகின.

    டிடி மட்டுமில்லை நயன் - விக்கி கல்யாணத்திற்கு திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் வருகை தந்திருந்தனர்.

    Also read... நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தை ஆகஸ்டில் வெளியிட முயற்சி 

    அதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானும் ஒருவர். இவர் தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்து இறங்கினார். பின்பு நயன் - விக்கி ஜோடியை வாழ்த்தி அன்றே மும்பை திரும்பினார்.

    அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் நயன்தாராவும் நடிக்கிறார். இந்த நட்பின் பேரில் தான் ஷாரூக், நயன்தாரா கல்யாணத்திற்கு வருகை தந்திருந்தார். ஷாரூக்கான் நயன் கல்யாணத்தில் அட்லீயுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படமும் அந்த சமயம் வைரலானது.

    Also read... இசையமைப்பாளராக மாறும் இயக்குநர் மிஷ்கின்

    இந்நிலையில் டிடியும் ஷாரூக்கான் உடன் நயன் - விக்கி திருமணத்தில் புகைப்படம் எடுத்துள்ளார்.



    இந்த புகைப்படங்களை வெளியிட்டு ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது-

    ஒவ்வொரு நாளும் ஷாரூக்கான் மகிழ்ச்சியோடு இருப்பதற்காக நான் பிரார்த்தனை செய்வேன். டார்லிங் அட்லீக்கு மிகவும் நன்றி. நீங்கள் இயக்கும் ஜவான் திரைப்படம் ரூ. 1000 கோடி வசூலிக்க வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Atlee, Dhivyadharshini

    அடுத்த செய்தி