ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அம்மாவையும் என்னையும் ஏன் இப்படி பேசுறீங்க? வேதனையில் அர்ச்சனா மகள் சாரா போட்ட போஸ்ட்!

அம்மாவையும் என்னையும் ஏன் இப்படி பேசுறீங்க? வேதனையில் அர்ச்சனா மகள் சாரா போட்ட போஸ்ட்!

அர்ச்சனா மகள் சாரா

அர்ச்சனா மகள் சாரா

அர்ச்சனாவின் மகள் சாராவின் பதிவுக்கு விஜய் டிவி பிரபலமான திவ்யதர்ஷினி உட்பட பலரும் ஆறுதல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  நம்மில் பலருக்கும் சின்னத்திரை தொகுப்பாளினி அர்ச்சனாவை பற்றிய அறிமுகமே தேவைப்படாது. நகைச்சுவை நடிகர் சிட்டி பாபுவுடன் இணைந்து "காமெடி டைம்" என்கிற சன் டிவி நிகழ்ச்சி மூலம் அறிமுகமான அர்ச்சனா, தன்னந்தனியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பேட்டி எடுக்கும் அளவிற்கு தனது துறையில் உயர்ந்தவர்.

  சமீபத்தில் ரிலீஸ் ஆகி வசூலில் பட்டையை கிளப்பிய டாக்டர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்திருந்தனர் அர்ச்சனாவும் அவரது மகள் ஸாராவும்.

  தற்போது அர்ச்சனா, விஜய் டிவியில் ஒரு பிஸியான தொகுப்பாளனியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அர்ச்சனா, வெற்றிகரமாக தனது செக்கென்ட் இன்னிங்ஸை ஆட பிரதான காரணம் - வேற யாரு நம்ம "பிக் பாஸ்" தான்!

  விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4-இல் கலந்து கொண்ட பிறகு, எக்கச்சக்கமான நெகட்டிவ் விமர்சனங்களையும், ட்ரோல்களையும் அர்ச்சனா எதிர்கொண்டார். பின்னரே விஜய் டிவியில் மிஸ்டர் அன்ட் மிசர்ஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

  சின்னத்திரை தவிர்த்து, அர்ச்சனா தனியாக ஒரு யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். அதில் அவர் தன் மகள் சாராவுடன் இணைந்து பதிவிடும் வீடியோக்கள் அவ்வப்போது இண்டர்நெட்டில் வைரலாவதும வழக்கம் - குறிப்பாக பாத்ரூம் டூர்!.

  குறிப்பிட்ட வீடியோவில், அர்ச்சனாவும், சாராவும் தங்களது யூடியூப் சேனல் வழியாக அவர்களது வீட்டில் என்னென்ன இருக்கிறது என்பதை காட்சிப்படுத்தினர். அதில் வீட்டின் பாத்ரூமும் அடங்கும். அந்த வீடியோவில், நமது வீட்டில் உள்ள டாய்லெட்டில் ஒரு பெரிய ரூமே கட்டலாம் என்று கொஞ்சம் ஓவர் ஆகவே பேசியிருந்தனர்.

  இதையும் படிங்க.. கடைசி வரை ஸ்ருதிக்கு ஒரு நல்லது கூட நடக்காது போல! மெளன ராகம் சீரியலில் நின்ற கல்யாணம்

  நெட்டிசன்கள் அந்த வீடியோவை பலவகையில் வறுத்து எடுத்தனர், கடுமையாக விமர்சித்து ட்ரோல் செய்தனர். சற்றே சுதாரித்துக்கொண்டாலும் அர்ச்சனாவும், சாராவும் சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவ் ஆக இருப்பதை நிறுத்தவில்லை. அதே போல அவர்கள் எந்தவொரு வீடியோ அல்லது போட்டோவை பகிர்ந்தாலும் கூட, அதை ட்ரோல் செய்வதை நெட்டிசன்களும் நிறுத்தவில்லை.

  இதையும் படிங்க.. தாலி சென்டிமென்ட் போதும்.. வெற்றிக்கு தண்டனை வாங்கி தர போகும் அபிநயா!

  அண்மையில் தனியார் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் அர்ச்சனாவும் சாராவும் கலந்துகொண்ட ஒரு வீடியோவானது, நெகட்டிவ் கமெண்ட்களால் மூழ்கடிக்கப்பட்டது. இதனை பார்த்து கடுப்பான ஸாரா தன் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் வழியாக ஒரு போஸ்டை பகிர்ந்துள்ளார்.
   
  View this post on Instagram

   

  A post shared by zaara :) (@zaaravineet.offl)  அதில், "ஹாய் எல்லோருக்கும் வணக்கம். இது எங்களை வெறுப்பவர்களுக்கான ஒரு சிறிய குறிப்பு. ஒரு டிவி நிகழ்ச்சி வீடியோவின் கமெண்ட்ஸ் வழியாக நாங்கள் எக்கச்சக்கமான வெறுப்புணர்ச்சிமிக்க வார்த்தைகளை பெற்றுள்ளோம், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இவ்வளவு மோசமான வார்த்தைகளால் எங்களை திட்டியதில் பெண்களே அதிகம். எங்க குடும்பம் அன்பை மட்டுமே எடுத்துக்கொள்ளும். எங்களை பிடிக்கவில்லையா, உங்கள் கருத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அதை உங்களுடனேயே வைத்துக்கொள்வது நல்லது, ஏனெனில் அது எங்களை கடுமையாக பாதிக்கிறது. வெறுப்பவர்களை எண்டர்டெயின்மெண்ட் செய்ய எங்களுக்கு விருப்பமில்லை" என்று சாரா பதிவிட்டுள்ளார்.

  அவரின் இந்த பதிவிற்கு விஜய் டிவி பிரபலமான திவ்யதர்ஷினி உட்பட பலரும் ஆறுதல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Archana zara, Vijay tv, Zee tamil