புகையிலை விளம்பரத்தில் நடிக்க மறுத்த தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அல்லு அர்ஜுன். சமீபத்தில் அவர் நடித்த புஷ்பா திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற ஊ அண்டவா, ஏ சாமி ஆகியப் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பின.
இந்நிலையில் புகையிலை விளம்பரம் ஒன்றில் நடிக்க, அல்லு அர்ஜுனுக்கு கோடிகளில் சம்பளம் பேசப்பட்டது. ஆனால் நான் புகையிலை விளம்பரத்தில் நடித்தால், எனது ரசிகர்கள் தவறான பாதையில் செல்ல வாய்ப்புள்ளது, என்று அந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்தார்.
இதனையடுத்து பிரபலங்களும், ரசிகர்களும் அல்லு அர்ஜுனை வெகுவாக பாராட்டினர். இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ”புகையிலை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க பெருந்தொகையை ஊதியமாகத் தருவதாக ஆசை காட்டப்பட்ட போதிலும், சமூகக் கேடுகளை விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் அல்லு அர்ஜுன் மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது!
புகையிலை நிறுவன விளம்பரங்களில் தாம் நடித்தால், அதன் மூலம் உந்தப்பட்டு தமது ரசிகர்கள் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடும் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரது சமூக அக்கறை பாராட்டத்தக்கது!
சமந்தாவின் பாய் பிரெண்டாக ஸ்ரீசாந்த்... ட்ரெண்டிங்கில் திப்பம் தப்பம் பாடல்!
நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளில் நடித்தால், அதைப் பார்த்து ரசிகர்கள் புகையிலைக்கு அடிமையாவார்கள் என்பதால் தான் அத்தகைய காட்சிகளில் நடிப்பதை தவிர்க்கும்படி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது முன்னணி நடிகர்களுக்கு கடிதம் எழுதினேன்!
கே.ஜி.எஃப் 2 தயாரிப்பாளர்களுடன் சுதா கொங்கராவின் அடுத்தப்படம்!
புகையிலை நிறுவன விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்படங்களிலும் புகைக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும். அனைத்து நடிகர்களும் அவர்களின் ரசிகர்கள் உள்ளிட்ட மக்கள் நலன் கருதி புகைக்கும் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Allu arjun, Anbumani ramadoss