ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிவகார்த்திகேயன் படத்தை கைப்பற்றிய அன்புச்செழியன்...!

சிவகார்த்திகேயன் படத்தை கைப்பற்றிய அன்புச்செழியன்...!

பிரின்ஸ்

பிரின்ஸ்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படத்தை தமிழகத்தில் அன்புச்செழியன் வெளியிடுகிறார்.

தமிழகத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது. குறிப்பாக புஷ்பா, ஆர்.ஆர்.ஆர் பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், விக்ரம் என பல படங்களை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் முதலில் மதுரை அன்பு செழியனுக்கு தமிழக உரிமை வழங்கப்பட்டது. அதன்பிறகு ரெட் ஜெயன்ட் நிறுவனம் அந்த உரிமையை கைப்பற்றியதாகவும் கூறப்பட்டது.

இதற்கான விளக்கத்தை உதயநிதி ஸ்டாலினும் பாடல் வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார். அதுவும் கமல்ஹாசனை மிரட்டியதாக பலர் கேட்டனர். நான் கமலை மிரட்டவும் இல்லை, அவரை யாரும் மிரட்டவும் முடியாது எனவும் கூறினார்.

இந்த நிலையில் சிறிய இடைவேளைக்கு பிறகு கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பிரின்ஸ் திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். சமீபத்தில் வெளியான பெரிய படங்கள் அனைத்தையும் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட்டு வந்தது. இதன் காரணமாக சில விநியோகஸ்தர்கள் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

அதேசமயம் தயாரிப்பாளர்கள் தரப்பில் தொழில்முறையில் தங்களுக்கு சரியான ஷேர் தொகை குறித்த நேரத்தில் வந்து விடுவதாகவும், திட்டமிட்டபடி படம் வெளியாக உதவுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இருந்தாலும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தொடர்ந்து பெரிய படங்களின் உரிமையை கைபற்றுவதுற்கு வினியோகஸ்தர்கள் மத்தியில் மறைமுக எதிரிப்பு இருந்தது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பிரின்ஸ் திரைப்படத்தை, மதுரை அன்பு செழியன் கைப்பற்றி இருப்பது சினிமாத்துறையில் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

Also read... Vijay 66: வெளியானது விஜய் 66 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment, Sivakarthikeyan