Home /News /entertainment /

கமிஷனரிடம் புகாரளித்த ஆனந்தம் விளையாடும் வீடு படக்குழு..

கமிஷனரிடம் புகாரளித்த ஆனந்தம் விளையாடும் வீடு படக்குழு..

ஆனந்தன் கொண்டாடும் வீடு

ஆனந்தன் கொண்டாடும் வீடு

Anandam Movie : கௌதம் கார்த்திக், சேரன், சரவணன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு.

சென்ற வாரம் வெளியான ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் படக்குழுவினர் சென்னை போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.

கௌதம் கார்த்திக், சேரன், சரவணன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு. நந்தா பெரியசாமி படத்தை இயக்கியுள்ளார். டிசம்பர் 24 திரைக்கு வந்த இந்தப் படம் சுமாரான வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

குடும்ப உறவுகளைப் பற்றிய ஆனந்தம் விளையாடும் வீடு போன்ற  படங்களை ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வந்து பார்ப்பது அபூர்வம். வருகிற ஒன்றிரண்டு பார்வையாளர்களையும் தடுக்கிறவிதமாக படம் வெளியான அன்றே பல இணையதளங்களில் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் ஹெச்டி பிரிண்டுகள் வெளியாகின. இது படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்தது.

இதனைத் தொடர்ந்து சென்னை மாநகர கமிஷனரிடம் படக்குழுவினர் புகார் அளித்தனர். படம் வெளியாகி நல்ல வரவேற்புடனும் ஓடிக் கொண்டிருக்கையில் நிறைய இணையதளங்கள், டெலிகிராம் குழு, டோரண்ட் சைட்களில் படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டுள்ளனர். எந்த தனி நபருக்கோ, நிறுவனத்துக்கோ படத்தின் டிஜிட்டல் உரிமையை தரவில்லை என அந்த புகாரில் தெரிவித்துள்ளனர்.

also read : பாரம்பரிய உடையில் திருப்பதி சென்ற ஜான்வி கபூர் - வைரலாகும் படங்கள்

அத்துடன், குடும்ப பார்வையர்கள் மத்தியில் ஆனந்தம் விளையாடும் வீடு படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. சட்டவிரோதமாக இணையத்தில் படத்தை வெளியிட்டிருப்பது படத்தின் வசூலை பாதிக்கும். இது தயாரிப்பாளரை மட்டுமின்றி இந்தப் படத்தை உருவாக்க உழைத்த அனைவரையும் பாதிக்கும் எனவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ப்படும் என காவல்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Movies

அடுத்த செய்தி