• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஓரின சேர்க்கையாளராக கௌரி கிஷன் - அனஹா: ரசிகர்கள் கொண்டாடும் ‘மகிழினி’ ஆல்பம்

ஓரின சேர்க்கையாளராக கௌரி கிஷன் - அனஹா: ரசிகர்கள் கொண்டாடும் ‘மகிழினி’ ஆல்பம்

மகிழினி ஆல்பம்

மகிழினி ஆல்பம்

பெண்ணும் பெண்ணும் காதல் கொள்வது பற்றிய ‘மகிழினி’ ஆல்பம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

  • Share this:
    LGBTQ என்ற தன் பாலின ஈர்ப்பாளர்கள் எனப்படும் ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றிய விழிப்புணர்வு பலரிடம் இல்லை. ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் காதலிப்பது, பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் உறவில் இணைவது தற்போது இயல்பானதாகியுள்ளது.

    சமுதாயத்தில் இதைப் பற்றிய சரியான புரிந்துணர்வை ஏற்படுத்த, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களும், மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் பல விதமாக முயற்சி செய்து வருகின்றனர். காதலிப்பதையே பெரிய தவறாகப் பார்க்கும் பெற்றோர்கள் மத்தியில், தன்பாலின ஈர்ப்பை மிகப்பெரிய குற்றமாக சமுதாயம் கருதுகிறது. இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, பெண்ணும் பெண்ணும் காதல் கொள்வது பற்றிய மகிழினி என்ற வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

    மகிழினி ஆல்பத்தில், நடிகை கௌரி கிஷன் மற்றும் அனஹா ஆகிய இருவரும் தன்பாலின ஈர்ப்பாளராக நடித்துள்ளனர். பரத நாட்டியம் மீது இருந்த ஆர்வத்தால் நாட்டிய வகுப்பில் சேரும் கௌரியும், அனஹாவும் ஒருவர் மீது ஒருவர் ஈர்க்கப்பட்டு, காதல் கொள்கின்றனர். ஆனால், தன்பால் ஈர்ப்பாளராக இருப்பதை இருவரின் குடும்பமும் மிகவும் கடுமையாக எதிர்க்கிறது, துன்புறுத்துகிறது. தங்கள் காதலை, அழகான உறவை எப்படி தங்கள் குடும்பத்தாரிடம் புரிய வைக்க முயற்சிக்கிறார்கள் என்பதை அற்புதமான நடனம், இசை, வரிகள் மற்றும் காட்சியமைப்புகள் மூலம் மகிழினி வெளிப்படுத்துகிறது.

    96 திரைப்படத்தில் ஜூனியர் ஜானுவாக நடித்தவர் கௌரி கிஷான். நட்பே துணை நாயகி மற்றும் நடனத்துக்காகவே பட்டிதொட்டி எங்கும் ஹிட்டான ‘வெச்சாலும் வெக்காம போனாலும்’ ரீமிக்ஸ் பாடல் புகழ் அனஹாவும் இதில் காதலர்களாக நடித்துள்ளனர். இந்த ஆல்பத்தின் இசையமைப்பாளர் கோவிந்த வசந்தா. பாடல் வரிகளை எழுதியவர் மதன் கார்க்கி. நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் கோப்ரா திரைப்படத்தின் இணை இயக்குனரான பாலசுப்ரமணியன் இந்த ஆல்பத்தை இயக்கியுள்ளார். LGBTQ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், 7 நிமிட ஆல்பம் ஒரு நேர்த்தியான குறும்படம் பார்த்த அனுபவத்தைத் தருகிறது.

    அழகான திரைக்கதை, நடனம், மேக்கப், காஸ்ட்யூம் உடன் அழகான கௌரி மற்றும் அனஹா இந்த கருவிற்கு உயிரூட்டியுள்ளனர். பொதுவாக, திரைப்படங்கள், குறும்படங்கள், வெப் சீரிஸ் போன்றவை எளிதில் பல தரப்பு மக்களையும் எளிதாகச் சென்றடையும். ஆனால், திரைப்படங்கள் மற்றும் OTT தளங்களிலும் ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றிய விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே படங்கள் / சீரீஸ்கள் உள்ளன.



    இந்நிலையில், ஒரே பாலினத்தின் ஈர்ப்பு ஏற்படுவது இயல்பானது, இது குறைபாடு அல்ல, பிறக்கும் போதே உடலியல் ரீதியான அமைப்பு தான் என்பதை உணர வைக்கும் ஒரு அற்புதமான முயற்சியாக ‘மகிழினி’ வெளிவந்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது. சரிகமப ஒரிஜினலில் வெளியான இந்த ஆல்பம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: