Home /News /entertainment /

நாளை திரையரங்கு உரிமையாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம்!

நாளை திரையரங்கு உரிமையாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம்!

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழகத்தில் உள்ள பெரிய திரையரங்குகளை சிறிய திரையரங்குகளாக மாற்ற தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திரையரங்க உரிமையாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது.

பெரிய திரையரங்குகளை சிறிய திரையரங்குகளாக மாற்ற தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சொத்து வரி, மின்சார கட்டணம் ஆகியவற்றில் தமிழக அரசு சலுகை வழங்க வேண்டும். பெரிய திரையரங்குகளை சிறிய திரையரங்குகளாக மாற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தவுளனர்.

கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதல்வராக இருந்தபோது அட்டவணை 8 என்ற பிரிவில் சலுகை வழங்கியிருந்தனர். ஆனால் தற்போது கமர்ஷியல் என்ற பிரிவில் தங்கள் தொழிலை கொண்டுவந்துள்ளனர்.

Also read... பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர்கள் தேர்வு எப்படி இருந்தது - மணிரத்னம் விளக்கம்!

மத்திய அரசு தங்கள் தொழிலை MSME-யாக அங்கீகரித்துள்ளது. அதனால் கமர்ஷியல் பிரிவில் இத் தொழில் வராது. எனவே, தங்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க திட்டம்.

மேலும் தயாரிப்பாளர்கள் புதிய படங்களின் ஓ.டி.டி வெளியீட்டை இரண்டு மாதங்களாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைக்க உள்ளனர்.

இந்த கூட்டம் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரமேஷ் பாபு மற்றும் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Theatre

அடுத்த செய்தி