Home /News /entertainment /

ரூ. 6 கோடி செலவில் உருவாகும் படங்கள் சிறிய பட்ஜெட் படங்களாக கருதப்படும் - தயாரிப்பாளர் சங்கம், பெப்சி ஒப்பந்தம்!

ரூ. 6 கோடி செலவில் உருவாகும் படங்கள் சிறிய பட்ஜெட் படங்களாக கருதப்படும் - தயாரிப்பாளர் சங்கம், பெப்சி ஒப்பந்தம்!

தயாரிப்பாளர் சங்கம், பெப்சி

தயாரிப்பாளர் சங்கம், பெப்சி

தமிழ் சினிமாவின் சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக படப்பிடிப்பின் குறைந்த அளவில் தொழிலாளர்களை பயன்படுத்துவது மற்றும் கால்ஷீட்டுக்கு சம்பளம் வழங்குவது உள்ளிட்ட பல சலங்கைகள் வழங்கப்படுகின்றன. 

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தமிழ் சினிமாவில் ஆறு கோடி ரூபாய் செலவில் உருவாகும் திரைப்படங்களை சிறிய பட்ஜெட் திரைப்படங்களாக கருதப்படும் என தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக்கி உள்ளது.

தமிழ் சினிமாவின் சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக படப்பிடிப்பின் குறைந்த அளவில் தொழிலாளர்களை பயன்படுத்துவது மற்றும் கால்ஷீட்டுக்கு சம்பளம் வழங்குவது உள்ளிட்ட பல சலங்கைகள் வழங்கப்படுகின்றன.

இதுவரை நான்கு கோடிக்கு குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களை சிறிய பட்ஜெட் படமாக கருதி வந்தனர். அதை தற்போது ஆறு கோடிக்குள் எடுக்கும் திரைப்படங்களை சிறிய பட்ஜெட் திரைப்படங்களாக கருதப்படும் என மாற்றியுள்ளனர்.

அதற்காக தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சி ஆகிய இரு அமைப்புகளிடமும் அங்கீகாரம் பெற வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றனர்.

அந்த சிறிய பட்ஜெட் படத்திற்குள் நடிகர், நடிகைகள், இயக்குனர் உள்ளிட்ட அனைவரின் சம்பளங்களும் அடங்கும் எனவும் தெரிவித்திருக்கின்றனர்.

Also read... Exclusive: கேக் வெட்டி, பிரியாணி கொடுத்து எனது பிறந்த நாளை அசத்திவிட்டர் உதயநிதி - வடிவேலு நெகிழ்ச்சி

அந்த வகை திரைப்படங்களுக்கு சிறிய திரைப்படங்களுக்கான வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் பொருந்தும் எனவும் அறிவித்துள்ளனர்.

சிறிய பட்ஜெட் படங்கள் குறித்து முறைகேடான தகவல் கொடுத்தால் இரு சங்கங்களும் பேசி முடிவெடுக்கும் எனவும் அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment, Producer Council

அடுத்த செய்தி