Home /News /entertainment /

திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்ற ஏமி ஜாக்சன் சர்ச்சை நடிகருடன் புதிய காதல்?

திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்ற ஏமி ஜாக்சன் சர்ச்சை நடிகருடன் புதிய காதல்?

ஏமி ஜாக்சன் - எட் வெஸ்ட்விக்

ஏமி ஜாக்சன் - எட் வெஸ்ட்விக்

ஏமி ஜாக்சன் நடித்துள்ள காசிப் கேர்ள் என்ற படத்தில் நடித்துள்ள நடிகர் எட் வெஸ்ட்விக் அவர் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

    காதலரை பிரிந்த ஏமி ஜாக்சன், தற்போது பிரபல நடிகர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நடிகை ஏமி ஜாக்சன் மற்றும் ஜார்ஜ் பனயிட்டோ இருவரும் காதலித்து, 2019-ஆம் ஆண்டில் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டனர். தொடர்ந்து திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானர் ஏமி. அதே ஆண்டில் தங்கள் முதல் குழந்தை ஆண்ட்ரியாஸை வரவேற்றனர் ஏமி-ஜார்ஜ் தம்பதி. பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜார்ஜின் படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கினார் ஏமி.

    Happy Birthday Sivakarthikeyan: வெள்ளித்திரையில் வெற்றிக்கொடி நாட்டிய சின்னத்திரை பிரபலம்!

    ஏமி ஜாக்சன் மற்றும் ஜார்ஜ் பனயிட்டோ இருவருக்கும் ஒத்துப்போகவில்லை என்றும் அதனால் அவர்கள் பிரிந்துவிட்டதாகவும் பரவலாக பேசப்பட்டது. ஜார்ஜை பிரிந்து சில மாதங்களே ஆன நிலையில், தற்போது பிரபல நடிகருடன் ஒருவருடன் ஏமி உறவில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது ஏமி ஜாக்சன் நடித்துள்ள காசிப் கேர்ள் என்ற படத்தில் நடித்துள்ள நடிகர் எட் வெஸ்ட்விக் அவர் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகக் குறிப்பிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளன ஆங்கில ஊடகங்கள். எட் வெஸ்ட்விக் ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டமார் என்ற பெண்ணை இரண்டு ஆண்டுகளாக காதலித்தார்.

    Dhanush: மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகு மகன் யாத்ராவுடன் தனுஷ் - கவனம் பெறும் புகைப்படம்!

    பின்னர் அந்த உறவு பிரேக்கப்பில் முடிந்தது. அதுமட்டுமல்லாமல், 3 பெண்கள் எட் வெஸ்ட்விக் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினர். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் எட் வெஸ்ட்விக் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகக் கூறப்படும் ஏமி ஜாக்சனை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actress Amy Jackson

    அடுத்த செய்தி