Amy Jackson: திருமணத்துக்கு முன்பே குழந்தை... உயிர்காதலரைப் பிரிகிறாரா ஏமி ஜாக்சன்?

காதலர் ஜார்ஜுடன் ஏமி

நடிகை ஏமி ஜாக்சன் தனது காதலர் ஜார்ஜ் பனயிட்டோவை பிரிந்து விட்டதாக செய்திகள் வலம் வருகின்றன.

  • Share this:
    ஏமி ஜாக்சன் மற்றும் ஜார்ஜ் பனயிட்டோ இருவரும் காதலித்து, 2019-ஆம் ஆண்டில் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டனர். தொடர்ந்து திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானர் ஏமி. அதே ஆண்டில் தங்கள் முதல் குழந்தை ஆண்ட்ரியாஸை வரவேற்றனர் ஏமி-ஜார்ஜ் தம்பதி. இப்போது, ஜார்ஜின் படங்களை ஏமி, இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியதாக தெரிகிறது. இருப்பினும், பாஃப்டா விருதுகளில் அவர்களைப் பற்றிய படம் இன்னும் உள்ளது.

    ஏமி ஜாக்சன் மற்றும் ஜார்ஜ் பனயிட்டோ இருவருக்கும் ஒத்துப்போகவில்லை என்றும் அதனால் தற்போது இவர்கள் பிரிந்துவிட்டதாகவும் பரவலாக பேசப்படுகிறது. ஏற்கனவே நடிகைகள் திரிஷா, இலியானா ஆகியோர் இதே போன்று திருமணம் நிச்சயமான பின் புகைப்படங்களை நீக்கி திருமண முறிவை வெளிப்படுத்தினார்கள். அதே போல் ஏமி ஜாக்சனும் செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இருப்பினும் ஏமி ஜாக்சன், ஜார்ஜ் பனயிட்டோ இருவரும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. 29 வயதான ஏமி ஜாக்சன், இறுதியாக ஷங்கர் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து 2.0 படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: