நடிகை எமி ஜாக்‌ஷனுக்கு ஆண் குழந்தை - வைரலாகும் புகைப்படம்!

நடிகை எமி ஜாக்‌ஷனுக்கு ஆண் குழந்தை - வைரலாகும் புகைப்படம்!
குழந்தையுடன் எமி ஜாக்சன் மற்றும் கணவர்
  • News18
  • Last Updated: September 23, 2019, 5:27 PM IST
  • Share this:
நடிகை எமி ஜாக்‌ஷனுக்கு ஆண் குழந்தை பிறந்ததுள்ளது. இதை தனது சமூகவலைதள பக்கத்தில் புகைப்படமாக அவர் பதிவிட்டுள்ளார்.

மதராசப்பட்டினம் படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான எமி ஜாக்சன் லண்டனில் வசித்து வருகிறார்.

மதராசப்பட்டினம் படத்தை தொடர்ந்து விஜய்யுடன் தெறி, தனுஷின் தங்கமகன், விகரமுடன் ’ஐ’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள எமி , ரஜினிகாந்துடன் 2.0 படத்திலும் நடித்திருந்தார்.


ஜார்ஜ் பெனாய்டோ என்பவரைக் காதலித்து வந்த எமி ஜாக்‌ஷன், தனது கர்ப்பகால புகைப்படங்களையும் சமூகவலைதளத்தில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தற்போது தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார். எமி ஜாக்‌ஷனின் இந்தப் பதிவைப்பார்த்த அவரது நண்பர்களும், திரை உலகினரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

முன்னதாக தனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்றும், அக்குழந்தைக்கு ஆண்ட்ரிஸ் என்று பெயரிட இருப்பதாகவும் எமி தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.


 
View this post on Instagram
 

Our Angel, welcome to the world Andreas 💙


A post shared by Amy Jackson (@iamamyjackson) on


ஏமி ஜாக்சனின் புகைப்பட கேலரி கீழே...வீடியோ பார்க்க: படம் ஓட விஜய் அரசை விமர்சிக்கிறார் -அமைச்சர் ஜெயக்குமார்

First published: September 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading