ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அமுல் பேபிஸ் ஆன பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள்..! வைரலாகும் படம்.!

அமுல் பேபிஸ் ஆன பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள்..! வைரலாகும் படம்.!

அமுல் பேபி

அமுல் பேபி

பொன்னியன் செல்வனின் திரைப்படம் திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் நிலையில், அதற்கு சிறப்பு செய்யும் விதமாக அமுல் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பொன்னியன் செல்வனின் திரைப்படம் திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் நிலையில், அதற்கு சிறப்பு செய்யும் விதமாக அமுல் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

  கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை, இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வம் பாகம் 1 என படமாக இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் கடந்த மாதம் 30ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.

  இந்த படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் நிலையில், தொடர்ந்து 5வது நாளாக வசூல் வேட்டையை குவித்து வருகிறது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அமுல் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டு பொன்னியின் செல்வன் படத்தை கவுரப்படுத்தியுள்ளது.]


  அதில், பொன்னியின் செல்வன் போஸ்டரில் இடம்பெற்றுள்ள வந்தியதேவன், நந்தினி, குந்தவை, ஆதித்ய கரிகாலன் ஆகிய கதாபாத்திரங்களின் வேடத்தில் அமுல் நிறுவனத்தின் டிரேட் மார்க்கான அமுல் பேபி இடம்பெற்றுள்ளது.

  அமுல் பேபி வந்தியதேவன், அமுல்பேபி நந்தினி, அமுல்பேபி குந்தவை, அமுல்பேபி ஆதித்ய கரிகாலனாக உருவெடுத்துள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை கண்ட பலரும் அடடே அழகாக உள்ளதே என பாராட்டி வருகின்றனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Amul, Amul manufacturing, Ponniyin selvan