Home /News /entertainment /

நடிகர் ரஜினிகாந்த்துக்கு அம்ரித் ரத்னா விருது: நியூஸ்18 குழுமத்துக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நன்றி

நடிகர் ரஜினிகாந்த்துக்கு அம்ரித் ரத்னா விருது: நியூஸ்18 குழுமத்துக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நன்றி

ரஜினிகாந்துக்கு அம்ரித் ரத்னா விருது

ரஜினிகாந்துக்கு அம்ரித் ரத்னா விருது

Amrit Ratna Award: நடிகர் ரஜினிகாந்த்திற்கு (நெட்வொர்க் 18) நியூஸ் 18 குழுமம் சார்பில், அம்ரித் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைப்பெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் சார்பாக, அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.

மேலும் படிக்கவும் ...
    நடிகர் ரஜினிகாந்த்திற்கு நியூஸ்18 குழுமம் சார்பில் அம்ரித் ரத்னா விருது வழங்கப்பட்டது. இதனை அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெற்றுகொண்டார். மேலும், நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி இந்த விருதை வழங்கியமைக்காக நியூஸ்18 குழுமத்திற்கு தனது நன்றியை அவர் தெரிவித்துள்ளார்.

    தமிழ் மட்டுமல்லாது, தென்னிந்திய, இந்திய திரைப்படத் துறையின் சூப்பர் ஸ்டாராக ஜொலிப்பவர் நடிகர் ரஜினிகாந்த். கருப்பு வெள்ளை காலத்தில் களம் கண்ட ரஜினி, ஈஸ்ட்மென் கலர், டிஜிட்டல், அனிமேஷன், 3டி என நான்கு வெவ்வேறு தொழில்நுட்பத்திலும் நடித்துவிட்டார். இது இந்திய அளவில் வேறெந்த நடிகருக்கும் கிடைக்காத மிகப்பெரிய கௌரவம்.



    தனது திரைப்படங்கள் மூலம் ஒரு பக்கம் வசூலில் சாதனைபடைத்துகொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், மறுபக்கம்  கலைமாமணி தொடங்கி பத்மவிபூஷன் வரை எண்ணற்ற உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார். திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்கை கவுரவிக்கும் வகையில் தாதா சாகிப் பால்கே விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில் தற்போது அவருக்கு (நெட்வொர்க் 18) நியூஸ் 18 குழுமம் சார்பில், அம்ரித் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைப்பெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் சார்பாக, அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.



    மேலும், இந்த விருது வழங்கியமைக்காக தனது நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டில், நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் இந்த வேளையில், அப்பாவுக்கு நியூஸ்18 இந்தியாவின் அம்ரித் ரத்னா விருது வழங்கியதற்காக நியூஸ்18 இந்தி மற்றும் நியூஸ்18 தமிழ்நாடு ஆகியவைக்கு நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Aishwarya Rajinikanth, Network 18, Rajinikanth

    அடுத்த செய்தி