அமிதாப் பச்சனின் பாடிகார்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளமா?- விசாரணை, டிரான்ஸ்பருக்கு உத்தரவு

அமிதாப் பச்சன் மற்றும் அவரது பாடிகார்டு.

அமிதாப் பச்சனுக்கு பாடிகார்டாக இருந்து வந்த மும்பை போலீஸ் ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பாதித்ததாக எழுந்த புகார்களை அடுத்து அவரை பணியிட மாற்றம் செய்துள்ளது மும்பை போலீஸ்.

 • Share this:
  அமிதாப் பச்சனுக்கு பாடிகார்டாக இருந்து வந்த மும்பை போலீஸ் ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பாதித்ததாக எழுந்த புகார்களை அடுத்து அவரை பணியிட மாற்றம் செய்துள்ளது மும்பை போலீஸ்.

  அமிதாப் பச்சனின் தனிப்பட்ட மெய்க்காப்பாளராக 2015-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த ஜிதேந்திரா ஷிண்டே மீது இந்த புகார் எழுந்ததன் காரணமாக அவர் மீது துறை சார்ந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

  கான்ஸ்டபிள் ஆன ஷிண்டே மும்பை போலீஸ் துறையைச் சார்ந்தவர். பல ஆண்டுகளாக இவர் அமிதாபுக்கு பாடிகார்டாக இருந்து வந்துள்ளார். விதிகளின் படி 5 ஆண்டுகளுக்கு மேல் பிரபலஸ்தர் ஒருவருக்கு ஒரே நபர் பாடிகார்டாக இருக்கக் கூடாது, ஆனால் ஷிண்டே 6 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.

  இந்நிலையில் ஷிண்டே ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பாதிப்பதாக செய்திகள் வெளியாகின. இவர் அமிதாப்பச்சனிடமிருந்து இந்த சம்பளம் பெற்றாரா, அல்லது வேறு வகைகளில் இவர் சம்பாதித்தாரா என்பதை மும்பை போலீஸ் தற்போது விசாரித்து வருகிறது.

  ஆனால் ஷிண்டே கூறுவது என்னவெனில் தான் ஒரு செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருவதாகவும் அதன் மூலம் மும்பை பிரபலங்களுக்கு பாதுகாப்புப் பணிவிடை செய்து வருவதாகவும் கூறியுள்ளார், தன் மனைவி இந்த செக்யூரிட்டி நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் அவர் மும்பை போலீசிடம் தெரிவித்துள்ளார்.

  ஆனால் அமிதாப் தனக்கு ரூ.1.5 கோடி தரவில்லை என்பதையும் அவர் போலீஸிடம் தெரிவித்தார்.

  பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் எக்ஸ் பாதுகாப்பு உரிமம் பெற்றவர். எப்போதும் 2 காவலர்கள் அமிதாபுக்குக் காவலிருப்பார்கள். ஷிண்டே அமிதாபுக்கு மிகவும் பிடித்த பாடிகார்டு என்று கூறப்படுகிறது. அமிதாபுடன் ஷிண்டேவை பல இடங்களில் பார்த்திருக்கலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த பிரச்சனையடுத்து தற்போது ஷிண்டே தெற்கு மும்பை காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: