”KBC-ன் வரலாற்றில் நீங்கள் தான் முதல் பெண் தொகுப்பாளர்...” ராதிகாவை வாழ்த்திய அமிதாப் பச்சன்

news18
Updated: November 9, 2019, 6:47 PM IST
”KBC-ன் வரலாற்றில் நீங்கள் தான் முதல் பெண் தொகுப்பாளர்...” ராதிகாவை வாழ்த்திய அமிதாப் பச்சன்
ராதிகா சரத்குமார்
news18
Updated: November 9, 2019, 6:47 PM IST
கோடீஸ்வரி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகை ராதிகா சரத்குமாருக்கு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் வாழ்த்து கூறியுள்ளார்.

14 கேள்விகளுக்கு சரியான பதிலைச் சொல்பவருக்கு ரூ.1 கோடி பரிசளிக்கும் நிகழ்ச்சி கோன் பனேகா குரோர்பதி. இந்த நிகழ்ச்சியை அமிதாப்பச்சன் முதலில் தொகுத்து வழங்கினார். பின்னர் தமிழில் நடிகர் சரத்குமார், சூர்யா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் தொகுத்து வழங்கினார்கள்.

இதே வரிசையில் தற்போது கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாக இருக்கும் இந்நிகழ்ச்சியை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்குகிறார். பெண்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியும்.


இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகை ராதிகாவை பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் வாழ்த்தியுள்ளார். இதுகுறித்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பேசியிருக்கும் நடிகர் அமிதாப்பச்சன், “ராதிகா அவர்களுக்கு வணக்கம். அமிதாப்பச்சன் பேசுகிறேன். கோடீஸ்வரி நிகழ்ச்சி மூலம் உங்களோடு உரையாடுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

திரைப்படங்களில் ஒரு சக நடிகனாக உங்களுடன் பணியாற்றி இருக்கிறேன். நீங்கள் கோடீஸ்வரி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகீறீர்கள் என்பதையும் தாண்டி உங்களை வாழ்த்த பல காரணங்கள் இருக்கின்றன. KBC-ன் வரலாற்றில் நீங்கள் தான் முதல் பெண் தொகுப்பாளராக இருக்கப் போகிறீர்கள். இது இந்திய அளவில் மட்டுமல்ல சர்வதேச KBC நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே பங்குபெறக்கூடிய இந்நிகழ்ச்சி தனித்துவமானது மட்டுமல்ல பாராட்டுதலுக்கும் உரியது. இது நிச்சயம் பெண்களுக்கு ஊக்கமளிக்கக் கூடியதாக இருக்கும். உங்களுக்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுக்கும் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.



அமிதாப்பச்சனின் வாழ்த்துக்கு ராதிகா சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
First published: November 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...