ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உங்களுடன் என்னை ஒப்பிட முடியாது... ரஜினிக்கு அமிதாப் பச்சன் பதில்!

உங்களுடன் என்னை ஒப்பிட முடியாது... ரஜினிக்கு அமிதாப் பச்சன் பதில்!

அமிதாப் பச்சன் - ரஜினிகாந்த்

அமிதாப் பச்சன் - ரஜினிகாந்த்

உங்கள் அபாரமான உயரத்தோடும் பெருமையோடும், என்னை ஒப்பிட முடியாது. நீங்கள் ஒரு சக ஊழியர் மட்டுமல்ல, மிகவும் அன்பான நண்பரும் கூட.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தனது 80-வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு, தன் நன்றியை தெரிவித்துள்ளார் நடிகர் அமிதாப் பச்சன். 

  இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம் என புகழப்படும் நடிகர் அமிதாப் பச்சன் நேற்று தனது 80-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அதில், “லெஜெண்ட். என்னை எப்போதும் ஊக்கப்படுத்தியவர். நமது புகழ்பெற்ற இந்தியத் திரையுலகின் உண்மையான சூப்பர் ஹீரோ 80-வது வயதில் நுழைகிறார். எனது அன்புக்கும், மதிப்பிற்கும் உரிய அமிதாப்பச்சனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருந்தார்.

  அதற்கு பதிலளித்திருக்கும் அமிதாப் பச்சன், “ரஜினி சார்.. நீங்கள் எனக்கு அதிக மதிப்பை கொடுக்கிறீர்கள். உங்கள் அபாரமான உயரத்தோடும் பெருமையோடும், என்னை ஒப்பிட முடியாது. நீங்கள் ஒரு சக ஊழியர் மட்டுமல்ல, மிகவும் அன்பான நண்பரும் கூட. உங்கள் அன்புக்கு என் நன்றியும் அன்பும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

  பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய முல்லை இவர் தான்!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அமிதாப் பச்சனின் 11 படங்களின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். தர்மத்தின் தலைவன், தீ, பில்லா, பணக்காரன், வேலைக்காரன் உள்ளிட்டவைகள் அடங்கும்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Amitabh Bachchan, Rajinikanth