இந்த
கொரோனா சிகிச்சை மருத்துவ மையம் 300 படுக்கைகளுடன் இன்று தொடங்குகிறது. அமிதாபின் இந்த மனிதாபிமான உதவிக்காக அவருக்கு குருத்வாரா நிர்வாகக் கமிட்டி நன்றிகளைப் பதிவு செய்தது.
அகாலிதளக் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் மஜீந்தர் சிங் சிர்ஸா தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் அமிதாப் பச்சனின் இந்த ரூ.2 கோடி நன்கொடை மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை ஏற்பாடு ஆகியவற்றை நன்றியுடன் அறிவித்தார். ரூ.2 கோடி நன்கொடை அளித்த அமிதாப், ‘சீக்கியர்கள் லெஜண்ட்கள், அவர்கள் சேவைக்கு வணங்குகிறேன்’ என்று அமிதாப் கூறியதையும் சிர்சா பதிவிட்டுள்ளார்.
மேலும் டெல்லியில் ஆக்சிஜனுக்காக திண்டாடி வரும் நிலையில் தங்களுக்கு தொலைபேசி செய்து அமிதாப் தினமும் நிலவரத்தைக் கேட்பார் என்றார்.
இங்கு சிகிச்சை, மருத்துவ ஆம்புலன்ஸ் உதவிகள் இலவசமாக வழங்கப்படும்.
வாக்ஸ் லைவ் நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு உதவக்கோரி அவர் பேசிய போது, ‘என் நாடு இந்தியா தற்போது
கொரோனா 2ம் அலையினால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு உலகக் குடிமகனாக சக உலகக் குடிமகன்களுக்கு உதவி செய்ய அழைக்கிறேன். உங்கள் அரசு, உங்கள் மருத்துவ நிறுவனங்களிடம் பேசுங்கள் அவர்களை நன்கொடை அளிக்கச் சொல்லுங்கள். மக்களுக்கு இது பெரிதும் தேவைப்படுகிறது. மகாத்மா காந்தி சொன்னது போல், “ஒரு மென்மையான முறையில் உலகை நாமும் உலுக்குவோம்” என்றார்.
விரைவில் கவுன் பனேகா குரோர்பதி 13ம் அத்தியாய ஷூட்டிங்கில் அமிதாப் நடிக்கத் தொடங்குவார். அயன் முகர்ஜியின் பிரம்மாஸ்திராவிலும் அமிதாபை விரைவில் திரையில் பார்க்கலாம். அமிதாபின் Chehre பட ட்ரெய்லர் ஏற்கெனவே ரிலீஸ் ஆகிவிட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.