ஐபிஎல் இறுதிப் போட்டியின்போது அமீர் கான் நடித்துள்ள லால் சிங் சத்தா படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமீர் கான் நடிப்பில் 2016-ல் வெளிவந்த தங்கல் திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றதுடன் ரூ. 2 ஆயிரத்திற்கும் அதிகமான வசூலை அள்ளியது. அந்த வகையில் இந்தியாவிலேயே அதிக வசூல் செய்த படமாக அமீர் கானின் தங்கல் திரைப்படம் இருக்கிறது.
இதற்கு பின்னர் அமீர் கான் தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் லால் சிங் சத்தா என்ற படத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அமீர் கான் எடுத்து வந்தார். இந்தப் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்பட்ட நிலையில், ஆகஸ்டில் படம் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்தன.
நீங்கள் யாருடைய மகன் என்ற கேள்விக்கு வனிதா விஜயகுமார் மகன் கூறிய பதில்
தி ஃபாரஸ்ட் கம்ப் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக்கை செய்துதான் அமீர் கான் லால் சிங் சத்தாவை உருவாக்கியுள்ளார். தி ஃபாரஸ்ட் கம்ப் படத்திற்கு ஆஸ்கர் உள்பட பல்வேறு விருதுகள் கிடைத்தன.
இதன் காரணமாக லால் சிங் சத்தா படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைத்தன்யா ராணுவ வீரர் கேரக்டரில் நடித்துள்ளார். அமீர் கானுக்கு ஜோடியாக படத்தில் கரீனா கபூர் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் லால் சிங் சத்தா படத்தின் ட்ரெய்லர் ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்கும் மே 29-ம்தேதி வெளியாகும் என்று அமீர் கான் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க - தமிழ் சினிமாவின் ’ஆல் இன் ஆல் அழகு ராஜா’ கவுண்டமணி பிறந்த நாள் ஸ்பெஷல்!
தற்போது ஐபிஎல் 15 வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இறுதிப் போட்டிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னேறியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.