• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கணவரை பிரிவதாக வந்த வதந்திக்கு சத்தமில்லாமல் முற்றுப்புள்ளி வைத்த ப்ரியங்கா சோப்ரா

கணவரை பிரிவதாக வந்த வதந்திக்கு சத்தமில்லாமல் முற்றுப்புள்ளி வைத்த ப்ரியங்கா சோப்ரா

 ப்ரியங்கா சோப்ரா,  நிக் ஜோனஸ்

ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ்

நிக் ஜோனஸ் உடற்பயிற்சி செய்யும் வீடியோவுக்கு இன்ஸ்டாகிராமில் கமெண்ட் செய்து, எங்களுக்குள் எந்த பிரிவும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ப்ரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸை பிரிவதாக திடீரென ஒரு வதந்தி கிளம்பியது. அதற்கு மறைமுகமாக பதிலளித்திருக்கிறார் ப்ரியங்கா சோப்ரா.

2000 இல் மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்று உலக அளவில் கவனம் பெற்றார் ப்ரியங்கா சோப்ரா. பொதுவாக மாடல்கள் மற்றும் உலக அழகிகளின் அடுத்த டார்கெட் சினிமாவாகவே இருக்கும். ப்ரியங்கா சோப்ராவும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

முதல் படம் விஜய் நடித்த தமிழன். அதன் பிறகு இந்தியில் பிஸியாகி ஹாலிவுட்டில் வெப் தொடர், சினிமா என்று கடல் கடக்க ஆரம்பித்தார். 2018 இல் நடிகரும், பாடகருமான நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு தனது பெயரை சமூக வலைத்தளங்களில் ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ் என குறிப்பிட ஆரம்பித்தார்.

யுஎஸ்ஸில் சொந்தமாக ரெஸ்டாரண்ட், வீடு என அங்கேயே ப்ரியங்கா சோப்ரா நிரந்தரமாக குடியேறிவிட்டார். இந்நிலையில் அவர் சமூகவலைத்தளத்தில் தனது பெயருடன் இருந்த ஜோனஸை நீக்க, இருவருக்குள்ளும் தகராறு, விரைவில் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என வதந்தி கிளம்பியது.

சமந்தா - நாக சைதன்யா பிரிவுக்கு முன்பும் இதே போல் சமந்தா தனது பெயருக்குப் பின்னிருந்த அக்னேனி என்ற கணவரின் குடும்பப் பெயரை நீக்கினார். அதை வைத்து ப்ரியங்காவும், ஜோனஸும் பிரியப் போகிறார்கள் என கருதினர்.

Also read... படப்பிடிப்பு முடியும் முன்பே 180 கோடிகள் லாபம் சம்பாதித்த ஷங்கர் படம்...?

இந்நிலையில், நிக் ஜோனஸ் உடற்பயிற்சி செய்யும் வீடியோவுக்கு இன்ஸ்டாகிராமில் கமெண்ட் செய்து, எங்களுக்குள் எந்த பிரிவும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார். சமூக வலைத்தளத்தில் உருவான சர்ச்சைக்கு வலைத்தளம் மூலமே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: