• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கர்ப்பம் குறித்த செய்தியால் பட வாய்ப்பை இழந்த காஜல் அகர்வால்!

கர்ப்பம் குறித்த செய்தியால் பட வாய்ப்பை இழந்த காஜல் அகர்வால்!

நடிகை காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் நாகார்ஜுனின் கோஸ்ட் படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார். அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியான நிலையில், திடீரென அவரை படத்திலிருந்து நீக்கியுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி கடந்த ஒரு வார காலமாக மீடியாவில் உலவிக் கொண்டிருக்கிறது. இதற்கு காஜல் அகர்வால் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில், இந்த வதந்தி காரணமாக தெலுங்குப் பட வாய்ப்பை அவர் இழந்துள்ளார்.

காஜல் அகர்வால் 2020 இல் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகும் நடிப்பதை தொடர்கிறார். 2021 இல் வெளியான வெப் தொடர் லைவ் டெலிகாஸ்டில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். அவரது நடிப்பில் ஹேய் சினாமிகா, கோஷ்டி, பாரிஸ் பாரிஸ் ஆகிய தமிழ்ப் படங்கள் வெளிவர உள்ளன. இந்தியன் 2, கருங்காப்பியம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சிரஞ்சீவி, ராம் சரண் நடித்துள்ள ஆச்சார்யாவிம் காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காஜல் அகர்வால் நாகார்ஜுனின் கோஸ்ட் படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார். அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியான நிலையில், திடீரென அவரை படத்திலிருந்து நீக்கியுள்ளனர்.

Also read... வெங்கடேஷ், ராணா நடிப்பில் ரீமேக்காகும் ரே டோனவன் வெப் தொடர்!

எதற்காக அவரை படத்திலிருந்து நீக்கினர் என்பது குறித்து தயாரிப்பு தரப்பு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அவர் கர்ப்பமாக இருப்பதாக வந்த செய்தியே அவரை படத்திலிருந்து நீக்க காரணம் என்கிறது தெலுங்கு திரையுலகம்.

காஜலுக்கு பதில் இலியானாவை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: