• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மீண்டும் சந்தனத்தேவனை தூசிதட்டும் இயக்குனர் அமீர்...!

மீண்டும் சந்தனத்தேவனை தூசிதட்டும் இயக்குனர் அமீர்...!

அமீர்

அமீர்

ஆதிபகவானுக்குப் பிறகு அமீர் ஆர்யாவையும், அவரது தம்பியையும் வைத்து சந்தனத்தேவன் என்ற படத்தை ஆரம்பித்தார். மதுரைப் பின்னணியில் ஜல்லிக்கட்டை மையப்படுத்திய கம்யூனிசம் கலந்த கதை. ஆனால், இந்தப் படம் ஆரம்பித்தநிலையிலேயே கைவிடப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரமாதமாக வருவார் என்று எதிர்பார்க்கும் சிலர் சுவடே இல்லாமல் காணாமல் போவது வருத்தத்துக்குரிய விஷயம். பருத்திவீரன் என்ற கல்ட் கிளாஸிக் திரைப்படத்தை தந்தவர் அமீர். அதுபோன்ற பல படைப்புகளை அவர் தருவார் என்று அனைவரும் எதிர்பார்க்க, அவரோ பல வருடங்களாக இயக்கம் என்ற ஏரியாவிலேயே இல்லை.

ராம், மௌனம் பேசியதே, பருத்திவீரன் படங்களின் ரசிகராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு ஒரு நற்செய்தி. ஆர்யாவை வைத்து பல வருடங்கள் முன் அறிவித்த சந்தனத்தேவன் படத்தை மறுபடியும் தொடங்க அமீர் திட்டமிட்டுள்ளார்.

பருத்திவீரனில் சிவகுமார் குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே அமீரை அவரது நோக்கத்திலிருந்து திசை திருப்பியது. இயக்குனர்தான் எல்லாம், அவர் நினைத்தால் யாரையும் ஹீரோவாக்க முடியும் என்று, அவரே நாயகனாக யோகி படத்தில் நடித்தார். அவர் அடுத்து இயக்கிய ஆதிபகவானும் தோல்வியடைய அமீர் சினிமாவிலிருந்து முற்றிலுமாக இல்லாமல் போனார்.

Also read... மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியுடன் நடிக்கும் பகத் பாசில்!

சிற்சில படங்களில் நடிகராக தலைகாட்டியதோடு சரி. பல வருடங்கள் முன்பு அமீர் நடிப்பில் பெரியோர்களோ தாய்மார்களே என்ற பெயரில் தொடங்கப்பட்ட படம், வி இஸ்ட் துரை இயக்கத்தில், நாற்காலி என்ற பெயரில் விரைவில் திரைக்கு வரவுள்ளது.



ஆதிபகவானுக்குப் பிறகு அமீர் ஆர்யாவையும், அவரது தம்பியையும் வைத்து சந்தனத்தேவன் என்ற படத்தை ஆரம்பித்தார். மதுரைப் பின்னணியில் ஜல்லிக்கட்டை மையப்படுத்திய கம்யூனிசம் கலந்த கதை. ஆனால், இந்தப் படம் ஆரம்பித்தநிலையிலேயே கைவிடப்பட்டது.

தற்போது இந்தப் படத்தை மீண்டும் தொடங்குவதற்கான வேலைகளை மேற்கொண்டு வருகிறார். அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பரில் படப்பிடிப்பை தொடங்குவது அமீரின் திட்டம். அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் அடுத்த வருடம் அமீரின் சந்தனத்தேவனை திரையரங்கில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: