Home /News /entertainment /

வெற்றிமாறன் திரைக்கதையில் மீண்டும் இயக்குனராகும் அமீர்...!

வெற்றிமாறன் திரைக்கதையில் மீண்டும் இயக்குனராகும் அமீர்...!

அமீர் மற்றும் வெற்றிமாறன்

அமீர் மற்றும் வெற்றிமாறன்

Ameer: வெற்றிமாறன் திரைக்கதையில் அமீர் ஒரு படத்தை இயக்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் கதை, திரைக்கதையில் தங்கம் என்பவரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார்.

  • News18
  • Last Updated :
இயக்கத்திலிருந்து பலவருடங்களாக தள்ளியிருந்த அமீர் மீண்டும் படம் இயக்குகிறார். இதன் சிறப்பம்சம், இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதுவது பிரபல இயக்குனர் வெற்றிமாறன்.

இயக்கத்தை தள்ளி வைத்து நடிப்பில் பிஸியான பலர் தமிழ் திரையுலகில் இருக்கின்றனர். இயக்குனராக இவர்களின் இழப்பு பல நேரங்களில் அவர்களின் சொந்த இழப்பாக மட்டும் இருக்கும். பருத்திவீரன் போன்ற ஒரு திரைப்படத்தை தந்த அமீர் இயக்கத்தில் இருந்து விலகி இருப்பது தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்ட இழப்பாகும். இதை அவரும் இப்போது உணர ஆரம்பித்திருக்கிறார்

ஆர்யாவையும், அவரது தம்பி சத்யாவை வைத்து பல வருடங்கள் முன் தொடங்கப்பட்ட சந்தனத்தேவன் திரைப்படத்தை அமீர் மீண்டும் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இதில் ஆர்யாவுக்கு பதில் அமீரும், சத்யாவும் நடிப்பதாகவும், படத்தை வேறு ஒருவர் இயக்குவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதன்பின் சந்தனத்தேவன் குறித்து எந்த செய்தியும் வெளியாகவில்லை.

இந்நிலையில் வெற்றிமாறன் திரைக்கதையில் அமீர் ஒரு படத்தை இயக்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் கதை, திரைக்கதையில் தங்கம் என்பவரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார்.



இதுகுறித்து சமூகவலைதளத்தில் குறிப்பிட்டிருக்கும் அமீர், ஒரு திரைப்படத்தில் இன்னொருவரின் பார்வையும் சேரும்போது திரைப்படம் மேலும் அழகாகிறது என தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை தயாரிப்பது யார், உடன் நடிப்பவர்கள் யார் என்பதான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

Also read... ஆங்கிலம் உட்பட ஆறு மொழிகளில் வெளியாகும் மாதவன் திரைப்படம்!
அமீர் வெற்றிமாறனின் வட சென்னை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வெற்றிமாறன் சூர்யாவை வைத்து அடுத்து இயக்க இருக்கும் வாடிவாசல் திரைப்படத்திலும் அமீர் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Director ameer, Director vetrimaran

அடுத்த செய்தி