Sarpatta Parambarai: சார்பட்டா பரம்பரைக்கு இத்தனை கோடிகளா? - ஆச்சரியத்தில் திரையுலகம்!

சர்பட்டா பரம்பரை

ஆர்யா படம் ஒன்று இத்தனை கோடிகளுக்கு விற்கப்படுவது தயாரிப்பாளர்களுக்கு பெருத்த லாபத்தை தரும்.

  • Share this:
    ரஞ்சித்தின் ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. வரும் 22-ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். திரையரங்கில் வெளியிடும் அளவுக்கு பிரமாண்டமாக தயாரான சார்பட்டா ஓடிடியில் வெளியாவது ரசிகர்களுக்கு ஏமாற்றமே. ஆனால், அமேசான் ஆஃபர் செய்த தொகை ரஞ்சித்தை கன்வின்ஸ் செய்ததால் ஓடிடி வெளியீட்டை அவர் ஒத்துக் கொண்டிருக்கிறார்.

    சார்பட்டா பரம்பரை எண்பதுகளில் வடசென்னையில் இயங்கி வந்த பாக்ஸிங் அணிகளைப் பற்றியது. ஆர்யா நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸும், கே9 ஸ்டுடியோஸும் இணைந்து தயாரித்துள்ளன. திரையரங்குகள் திறப்பது தள்ளிப் போனதால் படத்தை ஓடிடியில் வெளியிட தீர்மானித்தனர். அமேசான் இந்தப் படத்துக்கு 32 கோடிகள் அளித்ததாக கூறப்படுகிறது. ஆர்யா படம் ஒன்று இத்தனை கோடிகளுக்கு விற்கப்படுவது தயாரிப்பாளர்களுக்கு பெருத்த லாபத்தை தரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுவரை ஓடிடியில் நேரடியாக வெளியான திரைப்படங்களில் சூர்யாவின் சூரரைப் போற்று, தனுஷின் ஜகமே தந்திரம் ஆகியவை அதிக தொகைக்கு விலை போன படங்கள். ஜகமே தந்திரம் படத்துக்கு 55 கோடிகள் அளித்தது நெட்பிளிக்ஸ். சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட டிஸ்னி + ஹாட் ஸ்டார் 42 கோடிகள் பேசியுள்ளது. நான்காவதாக சார்பட்டா 32 கோடிகளுக்கு போயுள்ளது.

    திரையரங்கில் படத்தை வெளியிட ஒவ்வொரு ஏரியா விநியோகஸ்தரின் தயவு வேண்டும். அவர்கள் டிக்கெட் கணக்கை ஒழுங்காக காட்டுகிறார்களா என பார்க்க வேண்டும். இந்த பஞ்சாயத்தெல்லாம் இல்லாமல் போட்ட பணம் லாபத்துடன் திரும்பக் கிடைப்பது பெரிய விஷயம்.

    சார்பட்டா பரம்பரை 32 கோடிகளுக்கு விலை போயிருப்பது திரையுலகில் ஆச்சரியத்தையும், ஓடிடி மீது நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: