அமலாபாலின் ’ஆடை’ ரிலீஸில் தொடரும் சிக்கல்...! காலைக்காட்சிகள் ரத்து

காலைக் காட்சிக்கு முன் பதிவு செய்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

news18
Updated: July 19, 2019, 1:07 PM IST
அமலாபாலின் ’ஆடை’ ரிலீஸில் தொடரும் சிக்கல்...! காலைக்காட்சிகள் ரத்து
‘ஆடை’ படத்தில் அமலாபால்
news18
Updated: July 19, 2019, 1:07 PM IST
அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படம் ரிலீஸ் ஆகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

‘மேயாத மான்’ பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் ஆடை. இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

பெண் ஒருவர் ஆடையின்றி ஓர் இடத்தில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்ற பின்னணியில் இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஹீரோயினை மையப்படுத்தி நகரும் இக்கதையில் விஜே ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படத்துக்கு 'A' சான்றிதழ் வழங்கியுள்ளனர். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

படிக்க: ஆடையின்றி நடித்த போது... மன உணர்வை வெளிப்படுத்திய அமலாபால்!

இந்நிலையில் படம் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் ரசிகர்கள் பலரும் டிக்கெட் முன் பதிவு செய்தனர். கடைசி நேரத்தில் படத்தின் தயாரிப்பாளருக்கு பண விவகாரம் தொடர்பான பிரச்னைகள் உள்ளதால் திரைங்குகளுக்கு கேடிஎம் அனுப்பப்படவில்லை.

Loading...

இதனால் காலைக் காட்சி, பத்திரிகையாளர் காட்சிகள் ரத்தாகியுள்ளன. காலைக் காட்சிக்கு முன் பதிவு செய்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தயாரிப்பாளரின் முந்தைய பட பாக்கி குறித்து விநியோகிஸ்தர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படாததால் படம் ரிலீஸ் ஆவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

வீடியோ பார்க்க: அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கும் கமல்

First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...