முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நெற்றியில் விபூதி.. பக்தி பரவசம்.. தாயாருடன் பழனி முருகன் கோயிலுக்கு விசிட் அடித்த அமலாபால்!

நெற்றியில் விபூதி.. பக்தி பரவசம்.. தாயாருடன் பழனி முருகன் கோயிலுக்கு விசிட் அடித்த அமலாபால்!

அமலா பால்

அமலா பால்

கழுத்தில் பூ, நெற்றியில் விபூதியுடன் இருக்கும் தனது படங்களையும் அவர் இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகை அமலா பால் தனது தாயாருடன் பழனி முருகன் கோயிலுக்கு சென்றுள்ளார். நடிகை அமலா பால் கடைசியாக 'தி டீச்சர்' படத்தில் நடித்தார். அதற்கு முன் வெளியான அவரது 'கடாவர்' திரைப்படம் பாராட்டுகளைப் பெற்றது. தனது நடிப்பிற்காக விமர்சன ரீதியான பாராட்டுகளையும் பெற்றார் அமலா பால். எப்போதும் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், தனது விடுமுறை மற்றும் போட்டோஷூட் படங்களை தவறாமல் பகிர்ந்துக் கொள்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக, அவர் எந்த பிளாக்பஸ்டர் படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும், அமலா பால் மீதான ரசிகர்களின் அன்பு குறையவில்லை. இதற்கிடையே சமீபத்தில் பழனி முருகன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்றுள்ளார் அமலா. கழுத்தில் பூ, நெற்றியில் விபூதியுடன் இருக்கும் தனது படங்களையும் அவர் இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)வேலையைப் பொறுத்தவரை, மலையாளப் படங்களான 'கிறிஸ்டோபர்', 'த்விஜா', 'ஆடுஜீவிதம்' மற்றும் நீண்டகாலமாக தாமதமாகியுள்ள தமிழ் திரைப்படமான 'அதோ அந்த பறவை போல' மற்றும் ஹிந்திப் படமான 'போலா' உள்ளிட்ட படங்கள் அமலா பாலின் கைவசம் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Amala paul