Home /News /entertainment /

இரண்டாவது திருமணம் செய்துக் கொண்ட அமலா பால்... கோர்ட்டில் ஆதாரத்தை சமர்பித்த பவ்நிந்தர் சிங்

இரண்டாவது திருமணம் செய்துக் கொண்ட அமலா பால்... கோர்ட்டில் ஆதாரத்தை சமர்பித்த பவ்நிந்தர் சிங்

அமலா பால் - பவ்நிந்தர் சிங்

அமலா பால் - பவ்நிந்தர் சிங்

பஞ்சாபில் திருமணம் செய்துக் கொண்டதற்கான ஆதரத்தை பவ்நிந்தர் சிங் தத் சமர்ப்பித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பிரபல நடிகை அமலா பால் கொடுத்த பண மோசடி புகாரில் அவரின் ஆண் நண்பரை விழுப்புரம் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். பவ்நிந்தர் சிங் தத், அமலாபாலுடன் திருமணம் செய்துக்கொண்டதற்கான ஆதரங்களை நீதிமன்றத்தில் சமர்பித்ததைத் தொடர்ந்து வானூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியுள்ளது.  

    திரைப்பட தொழிலில் ஏற்பட்ட நட்பு காரணமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பவ்நிந்தர் சிங் தத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் இணைந்து திரைப்பட நிறுவனம் தொடங்கியதாகவும், பின்னர் 2018ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் பெரிய முதலியார்சாவடியில் தங்கியிருந்த போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதாகவும், அதனைத்தொடர்ந்து இருவரும் நெருக்கமாக பழகிய போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக மிரட்டல் விடுத்து, அச்சுறுத்தி, கொலை மிரட்டல் விடுத்து தனது பணம் மற்றும் சொத்துக்களை மோசடி செய்துவிட்டதாக ஆண் நண்பர் பவ்நிந்தர் சிங் தத் மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட 12 பேர் மீது நடிகை அமலாபால் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார்.

    இப்புகாரின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடந்தி வந்த நிலையில், பெரியமுதலியார்சாவடியில் தங்கி இருந்த நடிகை அமலாபாலின் ஆண் நண்பர் பவ்நிந்தர் சிங் தத்தை கடந்த 22-08-22 அன்று அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பவ்நிந்தர் சிங் தத்தை ரகசிய இடத்தில் வைத்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விழுப்புரம் அருகிலுள்ள வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.

    பொன்னியின் செல்வன் மேடையில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலைப் பாடிய யுவன் - சந்தோஷ் நாராயணன்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 11 பேரை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பவ்நிந்தர் சிங் தத் தரப்பில் வானூர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இருவரும் சேர்ந்து கடந்த 2018-ஆம் ஆண்டு 07-11-2018 அன்று பஞ்சாபில் திருமணம் செய்துக் கொண்டதற்கான ஆதரத்தை பவ்நிந்தர் சிங் தத் சமர்ப்பித்துள்ளார். இந்நிலையில் மனுவை விசாரித்த வானூர் நீதிமன்ற நீதிபதி வரலட்சுமி, பவ்நிந்தர் சிங் தத்க்கு  நிபந்தனையற்ற ஜாமின் வழங்கினார். அதனை தொடர்ந்து வேடம்பட்டு சிறையில் இருந்து பன்நிந்தர் சிங் தத் வெளியே அனுப்பபட்டார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Amala paul

    அடுத்த செய்தி