விஜய்க்கு நிறைய குழந்தைகள் பிறக்கட்டும்... நானும் புது உறவில் இருக்கிறேன் - அமலாபால்

என்னுடைய வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று அமலாபால் கூறியுள்ளார்.

news18
Updated: July 16, 2019, 5:04 PM IST
விஜய்க்கு நிறைய குழந்தைகள் பிறக்கட்டும்... நானும் புது உறவில் இருக்கிறேன் - அமலாபால்
அமலா பால்
news18
Updated: July 16, 2019, 5:04 PM IST
இயக்குனர் விஜய் திருமணம் செய்து கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக நடிகை அமலாபால் கூறியுள்ளார்.

இயக்குநர் விஜய்-க்கும் நடிகை அமலா பாலுக்கும் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு பிறகு 2017 பிப்ரவரி மாதம் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

இதையடுத்து ஐஸ்வர்யா என்ற பெண்ணை ஜூலை 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டார் இயக்குநர் விஜய்.

விஜய் திருமணம் குறித்து இதுவரை எதுவும் பேசாமல் இருந்து வந்த அமலாபால் தற்போது, ‘விஜய் திருமணம் செய்து கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு வாழ்த்துகள். விஜய் நல்ல மனிதர். தம்பதிகளுக்கு  வாழ்த்துகள். அவர்களுக்கு நிறைய குழந்தைகள் பிறக்கட்டும்.’ என்று கூறியுள்ளார்.

மேலும் விவாகரத்துக்கு பிறகும் கூட சினிமாவில் தனக்கு நல்ல கதாப்பாத்திரங்கள் கிடைப்பதாகவும், தன்னுடைய வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்றும் அமலாபால் கூறியுள்ளார்.

இதேபோல் தானும் ஒருவருடன் உறவில் இருப்பதாக அமலாபால் கூறியுள்ளார்.

Also watch

First published: July 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...