முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அருவியில் அமலா பால் ஆனந்த குளியல் - வைரலாகும் வீடியோ

அருவியில் அமலா பால் ஆனந்த குளியல் - வைரலாகும் வீடியோ

அமலா பால்

அமலா பால்

அந்த வகையில் இன்று அருவியில் ஆனந்தமாய் நீராடும் வீடியோவை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகை அமலா பால் தற்போது கைதி படத்தின் ஹிந்தி ரீமேக்கான போலா படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அவரது கதாப்பாத்திரம் பிளாஷ்பேக்கில் வரும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் மெலோடி பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் நடிகை அமலா பால் தனக்கு நண்பர் பாலியல் தொல்லை கொடுத்ததாக விழுப்புரத்தில் பரபரப்பு புகார் அளித்தார். இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளாராம். அதிலிருந்து விடுபட ஆன்மிக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளாராம். சமீபத்தில் பழனி முருகன் கேவிலுக்கு வந்திருந்தார்.

இதன் ஒரு பகுதியாக அவர் தற்போது இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள ஆசிரமத்திற்கு அமலா பால் சென்றிருக்கிறார். அங்கு தங்கி தியானம், வழிபாடு, யோகா ஆகியவற்றை மேற்கொண்டுவருவதாக கூறப்படுகிறது.




 




View this post on Instagram





 

A post shared by Amala Paul (@amalapaul)



அங்கு தனது மகிழ்ச்சியான தருணங்களை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில் இன்று அருவியில் ஆனந்தமாய் நீராடும் வீடியோவை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

First published:

Tags: Actress Amala paul