முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மறக்க முடியுமா? அமைதிப்படை அமாவாசை!

மறக்க முடியுமா? அமைதிப்படை அமாவாசை!

அமைதிப்படை

அமைதிப்படை

தமிழ் சினிமாவின், எவர் கிரீன் அரசியல் நையாண்டித் திரைப்படமாக மக்களால் கொண்டாடப்பட்டது அமைதிப்படை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அரசியல் திரைப்படங்கள் எத்தனையோ வந்திருந்தாலும் அவற்றில் . ரகளையாகவும் கேலியாகவும் வசனங்களால் அடித்து துவைத்துக் காயப்போட்ட கதாபாத்திரம் ‘அமைதிப்படை’ யின் அமாவாசை. . இக்கதாபாத்திரத்தை பற்றிய சிறப்பு பதிவு. 

இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் கடந்த 1994ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘அமைதிப்படை’. தமிழ் சினிமாவின், எவர் கிரீன் அரசியல் நையாண்டித் திரைப்படமாக மக்களால் கொண்டாடப்பட்டது. இதில் தேங்காய் பொறுக்கும் அமாவாசையாக இருக்கும் பிச்சைகாரராக வரும் சத்யராஜ் தன்னை ஏற்றி விட்ட அரசியல் தலைவர் மணிவண்ணன் முதல் பலரையும் ஏறி மிதித்துவிட்டு மேலேறி செல்லும் ஒரு வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் அமாவாசையாக தன் அசத்தல் நடிப்பை வழங்கியிருந்தார்.

தயவு செய்து இதுபோல் விளம்பரம் செய்யாதீர்கள். கோபத்தில் நடிகர் யோகி பாபு! என்ன காரணம்?

அமாவாசையின் ஆரம்ப காட்சியே அரசியலை நையாண்டி வசனங்களால் அப்பட்டமாய் சொல்லியிருக்கும். தேங்காய் பொறுக்கி பிச்சை எடுக்கும் அமாவாசையான சத்யராஜிடம் ‘ஏம்பா ஏழடிக்கு கையும் காலும் வைச்சிகிட்டு, நல்லாத்தானேப்பா இருக்கே’ என்று பேச்சு கொடுக்க, அமிஞ்சிக்கரை தொடங்கி அமெரிக்கா வரை அரசியல் பேசும் அமாவாசை அந்த நிமிடமே அப்பாய்ன்ட்மெண்ட் ஆர்டர் வாங்குவார் மணிவண்ணனிடம்.

’அல்வா கொடுத்துட்டான்யா’ என்று அல்வாவை, ஏமாற்றுவதற்கான குறியீடாகக் காட்டிய பெருமையும் இந்த அமாவசைக்கே சேர்ந்தது. சுயேச்சையாக தேர்தலில் நின்று ஓட்டு என்ணிக்கையின் போது கொஞ்சம் கொஞ்சமாக வாக்கு வித்தியாசம் கூடிக்கொண்டே போக அப்போது அமாவாசை செய்யும் அழிச்சாட்டியங்கள் அரசியல் உலகை கண்முன்னே நிறுத்தியது. அதோடு வெற்றி பெற்றபின் ‘சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ’ என்று எகத்தாளம் காட்டுவதில் அமாவாசைக்கு நிகர் அமாவாசையே..

வெற்றிக்கு கொடுக்கும் மரியாதை.. அலுவலகத்தின் வாசலை முத்தமிட்ட பிரபல நடிகர்!

’சண்டை வந்தால் பழைய பிரச்சினைகள் மறைந்து போகும்’ என்று சொல்லும் காட்சி… ‘இனி உங்களுக்கு டைம் சரியில்ல’ என்று சொன்ன ஜோஸியரைப் முடித்துக்கட்டும் காட்சி…. அரசியல் லாபங்களுக்காக தன் மனைவி சுஜாதாவையே கொன்று விட தன் அடியாளிடம் சொல்லும் காட்சி…. என ஆரம்பம் முதல் இறுதி வரை அமாவாசை செய்யும் அரசியல் அமைதிப்படையை நூறுநாட்களுக்கு மேல் ஓட செய்தது.

அரசியலை பகடி செய்து ரகளையான திரைப்படங்கள் ஆயிரம் வந்தாலும் இந்த அமாவாசையை அடிச்சுக்க ஆள் இல்லை என்பதே உண்மை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor sathyaraj, Kollywood, Tamil Cinema