தனது குழந்தை புகைப்படத்துடன் பெயரையும் அறிவித்த ஆல்யா மானசா!

ஆல்யா மானசா

 • Share this:
  தனது குழந்தைக்கு சூட்டப்பட்ட பெயரை ஆல்யா மானசா ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.

  தமிழ் சினிமாவில் குளிர் 100 டிகிரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சஞ்சீவ் விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் அதிக ரசிகர்களைப் பெற்றார். இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக ஆல்யா மானஷா நடித்திருந்தார். இதையடுத்து இருவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கடந்த மார்ச் 20-ம்தேதி பெண் குழந்தை பிறந்தது.

  இந்நிலையில் இதுவரை தனது குழந்தையை வெளிஉலகுக்கு காட்டாமல் இருந்த ஆல்யா மானசா, குழந்தையுடன் எடுக்கப்பட்ட புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் புகைப்படத்துடன் குழந்தைக்கு சூட்டியிருக்கும் பெயரையும் அறிவித்துள்ளார். அதில் பெண் குழந்தைக்கு அய்லா சையத் என்று பெயரிடப்பட்டுள்ளது.

  ஒரு தாயாக இந்த நாட்கள் தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் ஆல்யா இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவைப் பார்த்த பலரும் குட்டி பெண் குழந்தையான அய்லா சையதுக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.   
  View this post on Instagram
   

  Enjoying motherhood these days🤱🏼and We are so Happy to announce our cute little daughter’s name its “ Aila Syed”👶


  A post shared by Alya Manasa (@alya_manasa) on


  மேலும் படிக்க: கொரோனா வைரஸ் தாக்கி பிரபல பாடகர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்  Published by:Sheik Hanifah
  First published: