Home /News /entertainment /

தள்ளிச் சென்றது நயன்தாராவின் கோல்ட் படம் ரிலீஸ்!

தள்ளிச் சென்றது நயன்தாராவின் கோல்ட் படம் ரிலீஸ்!

பிருத்திவிராஜ் -  நயன்தாரா

பிருத்திவிராஜ் -  நயன்தாரா

கோல்ட் திரைப்படத்தின் பணிகள் முடிவடையாததால் ஒரு வாரம் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பிருத்திவிராஜ் -  நயன்தாரா நடிப்பில் 8-ம் தேதி வெளியாக இருந்த கோல்ட் திரைப்படத்தின் வெளியீடு ஒரு வாரம் தள்ளிச் சென்றுள்ளது. 

நேரம், பிரேமம் படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் தற்போது கோல்ட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்தில் பிரித்திவிராஜ்,  நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன.  இதையடுத்து கோல்ட் திரைப்படத்தை ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 8-ம் தேதி வெளியிட திட்டமிட்டனர்.

அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட புரமோஷன் வேலைகளும் நடைபெற்று வந்தன.

Also read... யுவன் சங்கர் ராஜாவின் எவர்கிரீன் மெலோடி சாங்ஸ்!

இந்த நிலையில் கோல்ட் திரைப்படத்தின் வேலைகள் முடிவடையவில்லை.  இதன் காரணமாக ஒரு வாரம் படத்தின் வெளியீடு தள்ளிச் செல்கிறது என இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அறிவித்திருக்கிறார்.



இதனால் ஓணம் பண்டிகை வெளியிட்டிருந்து கோல்ட் திரைப்படம் தள்ளிச் சென்றுள்ளது.  இருந்தாலும் அதற்கு அடுத்த வாரம் படம் வெளியாகும் என படக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment, Nayanthara

அடுத்த செய்தி