ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''8 வருஷமா அஜித்தை சந்திக்க முயற்சி பண்ணி டயர்டாகிட்டேன், எனக்கு எவ்வளவு வலி தெரியுமா?'' - பிரபல இயக்குநர் வேதனை

''8 வருஷமா அஜித்தை சந்திக்க முயற்சி பண்ணி டயர்டாகிட்டேன், எனக்கு எவ்வளவு வலி தெரியுமா?'' - பிரபல இயக்குநர் வேதனை

அஜித்

அஜித்

அவரை வைத்து படம் எடுத்தால் ஹாலிவுட், கோலிவுட் திரையரங்குகளில் படம் 100 நாட்கள் ஓடும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த 11 ஆம் தேதி வெளியான துணிவு திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இன்னும் துணிவு பட தயாரிப்பு தரப்பிலிருந்து வசூல் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும் சமூக வலைதளங்களில் வசூல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திவருகின்றன.

இதனையடுத்து நடிகர் அஜித் தற்போது ஏகே 62 படத்துக்காக தயாராகிவருகிறார். லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் சந்தானமும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் நயன்தாரா அல்லது திரிஷா ஆகிய இருவரில் ஒருவர் இந்தப் படத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் நடிகர் அஜித் குறித்த கேள்விக்கு பதிலளித்த  இயக்குநர் அல்போன்ஸ்

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் 'பிரேமம்' இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனிடம், 'நடிகர் அஜித்துடன் ஒரு படம் பண்ணுங்க தலைவா' என்று கோரிக்கை விடுத்திருந்தார். அவருக்கு பதிலளித்த அல்போன்ஸ், ''நடிகர் நிவின் என்னிடம் அஜித் சாருக்கு பிரேமம் படம் பிடித்திருந்ததாக கூறியிருந்தார். பிறகு, நான் ஒரு 10 முறை அவரின் மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் அஜித் சாரை சந்திக்க வேண்டும் என கேட்டு 8 வருஷம் ஆச்சு.

எனக்கு வயதாவதற்குள்ளாக அஜித் சாரை பார்த்தால் படம் பண்ணுவேன். ஒவ்வொரு முறையும் நீங்கள் இந்த கேள்வியை கேட்கும்போது எனக்கு எவ்வளவு வலிக்கும் தெரியுமா?

முயற்சி செய்து, செய்து எனக்கு சோர்வாகிவிட்டேன். இந்த மாதிரி கேள்விகளை எதிர்கொள்ளும்போது முதலில் கோபம் வரும். ஆனால் நீங்களும் என்னைப் போன்ற அஜித் ரசிகர் என்பதால் அமைதியாக கடந்துவிடுவேன். அவரை வைத்து படம் எடுத்தால் ஹாலிவுட், கோலிவுட் திரையரங்குகளில் படம் 100 நாட்கள் ஓடும். மேலும் உலக நாயகன், சூப்பர் ஸ்டார், தளபதியுடன் இணைய காத்திருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Actor Ajith