ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 பாடல்கள் லிஸ்டில் இடம்பிடித்த புஷ்பா!

கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 பாடல்கள் லிஸ்டில் இடம்பிடித்த புஷ்பா!

புஷ்பா

புஷ்பா

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் புஷ்பா படத்தின் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றன.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2022ம் ஆண்டில் சர்வதேச அளவில் அதிகமாக தேடப்பட்ட பாடல்களில் முதல் 10 இடத்தில் புஷ்பா படத்திலிருந்து ஸ்ரீவள்ளி பாடல் இடம்பெற்றுள்ளது.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்து கடந்த வருடம் வெளியான தெலுங்கு படம் புஷ்பா ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டும் அதிக வசூல் பார்த்தனர்.  சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த புஷ்பா படத்தின்  முதல் பாகம் மெகா ஹிட்டானது.  இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், ஃபஹத் பாசில், ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி, சுனில் ராவ் ரமேஷ், தனஞ்சயா, அஜய் கோஷ் அனசுயா பரத்வாஜ், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கூலித் தொழிலாளி ஒருவர் எப்படி செம்மரக்கடத்தல் தொழிலாளியாக மாறுகிறார். பின்னர் அந்த கூட்டத்திற்கே, தலைவனாக மாறுகிறார் என்பதை மிகவும் பரபரப்பான காட்சிகளுடன் எழுதி இயக்கி இருந்தார் சுகுமார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது புஷ்பா படத்தின் இரண்டாவது பாகமும் பரபரப்பாக தயாராகி வருகிறது.

Also read... WATCH: 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது விஜயின் தீ தளபதி பாடல்!

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் படத்தின் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றன.  ஸ்ரீ வள்ளி பாடலில் மிகவும் எதார்த்தமான, அல்லு அர்ஜுனின் வித்தியாசமான நடன அசைவுகளும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பாடகர் சித் ஸ்ரீராம் பாடி இருந்தார். ஹிந்தியில் ஜாவித் அலி பாடி இருந்தார். இவர் பாடிய இந்த பாடல் தான் தற்போது டாப் 10 லிஸ்டில் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actress Rashmika Mandanna, Allu arjun, YearEnder 2022