புஷ்பா திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் ஜனவரி 7 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.
திரைப்படங்களுக்கு ஓடிடி வருவாய் பெரும் லாபமாக மாறியிருக்கிறது. திரையரங்கில் வெளியான மூன்றாவது வாரத்தில் ஓடிடியில் சூர்யவன்ஷி இந்திப் படம் வெளியானதற்கு ஓடிடி நிறுவனம் 75 கோடிகள் தயாரிப்பாளருக்கு தந்தது.
தெலுங்குப் படம் புஷ்பா தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகி அனைத்து மொழிகளிலும் கலெக்ஷனை அள்ளியது. குறிப்பாக வடமாநிலங்களில் புஷ்பா இந்திப் பதிப்பு மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்திப் பதிப்பு மட்டும் இதுவரை 65 கோடிகளை கடந்து வசூலித்துள்ளது. முதல்வார இறுதியை விட மூன்றாவது வார இறுதியில் வசூல் அதிகம். அதுவும் கொஞ்சம் அல்ல கிட்டத்தட்ட ஐம்பது சதவீதம்.
Also read... பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகிய பிரபாஸின் ராதே ஷ்யாம்...!
இந்நிலையில் அமேசான் பிரைம் வீடியோ புஷ்பாவின் நான்கு மொழி பதிப்பையும் வருகிற 7 ஆம் தேதி - நாளை மறுநாள் - வெளியிடுகிறது. அன்று இரவு எட்டு மணிமுதல் புஷ்பாவை அமேசான் பிரைம் வீடியோவில் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.
Also read... தள்ளிப்போன அக்ஷய் குமாரின் பிருத்விராஜ் பட வெளியீடு...!
ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம் படங்கள் வெளியீட்டிலிருந்து பின் வாங்கியுள்ளன. குறிப்பாக 7 ஆம் தேதி வெளியாவதாக இருந்த ஆர்ஆர்ஆர் தள்ளிப்போனது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாமாக அமைந்தது. அதே தேதியில் புஷ்பாவை ஓடிடியில் வெளியிடுகின்றனர். ஆர்ஆர்ஆர் தந்த ஏமாற்றத்துக்கு புஷ்பாவின் ஓடிடி வெளியீடு ரசிகர்களுக்கு இதமான ஒத்தடம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Allu arjun