Allu Arjun : நடிகர் அல்லு அர்ஜூனுக்கு கொரோனா தொற்று

Allu Arjun : நடிகர் அல்லு அர்ஜூனுக்கு கொரோனா தொற்று

நடிகர் அல்லு அர்ஜூன்

முன்னணி தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

  • Share this:
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் வேகமெடுத்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொண்ட அவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் ரசிகர்கள் தன்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் நலமாக இருப்பதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



தமிழகத்தில் கொரோனா பாதிப்பு

தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு தொடர்ந்து மூன்றாவது நாளாக 15 ஆயிரத்தை கடந்துள்ளது. அதேவேளை, ஒரேநாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்து 830 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 13 ஆயிரத்து 502-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் சென்னையில் 27 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 87 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தமிழகத்தில் மரணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 14 ஆயிரத்து 43 பேர் என, இதுவரை மொத்தமாக 9 லட்சத்து 90 ஆயிரத்து 919 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 855 பேர் சிகிச்சையில் உள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: