புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா இடம்பெறும் ஆபாசக் காட்சியை படத்திலிருந்து நீக்கியுள்ளனர். குடும்பப் பார்வையாளர்கள் அசௌகரியமாக உணர்வதால் இந்தக் காட்சி நீக்கப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் ஓபனிங் வசூல் அபாரமாக இருந்தது. ஆனால், வார நாள்களில் படம் தாக்குப் பிடிக்க ரசிகர்கள் ஆதரவு மட்டும் போதாது குடும்ப ஆடியன்ஸ் திரையரங்குகளுக்கு வர வேண்டும். மேலும், படத்தின் மைனஸாக படத்தின் நீளம் சொல்லப்பட்டது.
புஷ்பாவில் அல்லு அர்ஜுனும், ராஷ்மிகா மந்தனாவும் இடம் பெறும் காதல் காட்சி ஒன்றில் ராஷ்மிகாவின் மார்பகத்தை குறிப்பிட்டு பேசும் காட்சி உள்ளது. இந்த காட்சியும், அதன் பொருளும், வசனங்களும் ஆபாசமாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. குடும்பமாக படம் பார்க்கிறவர்களுக்கு இந்தக் காட்சி அசௌகரியத்தை கொடுத்தது. பலதரப்பிலிருந்து விமர்சனம் வந்த நிலையில் குறிப்பிட்டக் காட்சியை படத்திலிருந்து நீக்கியுள்ளனர். அதனுடன் சேர்த்து வேறு சில காட்சிகளையும் எடிட் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க - பரம்பரை மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ’நான் ஈ’ நடிகை ஹம்சா நந்தினி
புஷ்பா படம் ஐந்து மொழிகளில் வெளியாகி அனைத்து மொழிகளிலும் நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளது. முதல் மூன்று தினங்களில் இந்தப் படம் உலக அளவில் 173 கோடிகளை வசூலித்து 2021 இந்திய படங்களில் வசூலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. படத்தில் எடிட் செய்யப்பட்டுள்ள காட்சிகள் குடும்ப ஆடியன்ஸை திரையரங்குகளுக்கு அழைத்துவரும் என நம்புகிறார்கள். எனினும் எடிட் செய்யப்பட்ட காட்சிகள் குறித்த விவரங்களை படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.