Pushpa: கிறிஸ்துமஸ் தினத்தில் 5 மொழிகளில் வெளியாகும் அல்லு அர்ஜுனின் புஷ்பா!

புஷ்பா திரைப்படம்

ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் அல்லு அர்ஜுனின் சகோதரியாக நடித்துள்ளார்.

  • Share this:
    புஷ்பா படத்தின் வெளியீட்டு தேதியை இன்று அறிவித்துள்ளனர். அல்லு அர்ஜுன், பகத் பாசில் முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு மூன்று மாநிலங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    அல்லு அர்ஜுனின் ஸ்டார் வேல்யூ படத்துக்குப் படம் எகிறுகிறது. சென்ற படம் ஆல வைகுந்தபுரமுலு பட்டையை கிளப்பியது. அதனை இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இதனையடுத்து அவர் நடித்தது சுகுமார் இயக்கத்தில். புஷ்பராஜ் என்ற செம்மரக்கடத்தல்காரராக இதில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. புஷ்பராஜின் சுருக்கம், புஷ்பா.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    புஷ்பராஜ் கதாபாத்திர அறிமுகம் என்று ஒரு டீஸரை வெளியிட்டனர். அல்லு அர்ஜுனின் அதகளமான ஆக்ஷனில் அந்த டீஸர் உடனடி ஹிட்டானது. பல சாதனைகளும் புரிந்ததாக கேள்வி. இந்தப் படத்தில் பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் நடிக்கும் முதல் தெலுங்குப் படம் இது. ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் அல்லு அர்ஜுனின் சகோதரியாக நடித்துள்ளார்.

    பான் - இந்தியா திரைப்படமாக தயாராகியுள்ள அல்லு அர்ஜுன் கிறிஸ்துமஸை முன்னிட்டு வெளியாவதாக அறிவித்துள்ளனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் படம் வெளியாகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: