Home /News /entertainment /

தெலுங்கு பேசும் தமிழ் பையன் நான் - அல்லு அர்ஜுன் நெகிழ்ச்சி!

தெலுங்கு பேசும் தமிழ் பையன் நான் - அல்லு அர்ஜுன் நெகிழ்ச்சி!

அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன்

புஷ்பா படத்தின் ஓ சொல்றியா பாடல் இன்றைய இளைஞர்களின் தேசிய கீதமாக மாறும் என்றார் கலைப்புலி எஸ் தாணு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    புஷ்பா படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன், தாணு, ஆர்.பி.சௌத்ரி, சிறுத்தை சிவா, தேவிஸ்ரீ பிரசாத், மதன் கார்க்கி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

    இதில் பேசிய பாடலாசிரியர் மதன் கார்க்கி, புஷ்பா படத்தின் தெலுங்கு வசனங்களை போலவே தமிழில் வசனம் எழுதுவது சவாலாக இருந்தது என்றார்.

    தமிழ்நாட்டின் நாளைய நம்பிக்கை நட்சத்திரம் அல்லு அர்ஜூன். ஆந்திராவில் கொடி கட்டிப் பறந்தாலும் தமிழில் பிறந்த மகன், தமிழால் வளர்ந்த மகன் அல்லு அர்ஜூன். புஷ்பா படத்தின் ஓ சொல்றியா பாடல் இன்றைய இளைஞர்களின் தேசிய கீதமாக மாறும் என்றார் கலைப்புலி எஸ் தாணு

    விழாவில் பேசிய அல்லு அர்ஜூன், ”தமிழ்நாட்டில்தான் பிறந்தேன். 20 வயது வரை தமிழ்நாட்டில் தான் வளர்ந்தேன். நல்ல படத்தோடு தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் என்பதற்காகவே இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தேன். நான் பேசும் தமிழ் தப்பாக இருந்தாலும், தமிழ் பேசுவது தான் அழகாக இருக்கும். புஷ்பா திரைப்படம் 4 படத்துக்கு சமம். சாமி சாமி பாடல் வெற்றிக்கு தேவி ஸ்ரீ பிரசத்தே காரணம். பாடல் வெற்றி பெற்றதால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் புஷ்பா படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக காத்திருந்தேன். தெலுங்கு பேசும் தமிழ் பையன் நான்” என்றார்.



    மேலும் படிக்க - நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி

    பின்னர் தமிழில் யார் நன்றாக டான்ஸ் ஆடுகிறார்கள்? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “கமல், விஜய், தனுஷ் அனைவரும் நன்றாக டான்ஸ் ஆடுகிறார்கள். சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் பிடித்திருந்தது. சிவகார்த்திகேயன் நன்றாக டான்ஸ் ஆடுகிறார். சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துகள்” என்றார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Allu arjun

    அடுத்த செய்தி