Home /News /entertainment /

Pushpa The Rise | 3 நாளில் 12 கோடி வசூலித்த புஷ்பா இந்தி டப்பிங்!

Pushpa The Rise | 3 நாளில் 12 கோடி வசூலித்த புஷ்பா இந்தி டப்பிங்!

அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன்

Pushpa The Rise | முதல் வார இறுதியில் புஷ்பாவின் இந்தி டப்பிங் மட்டும் 12 கோடிகளை வசூலித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் படம் கலக்குகிறது. வார இறுதியில் நாளுக்கு நாள் வசூல் அதிகரி த்தது சிறப்பான அம்சம்.

புஷ்பா படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17-ம் தேதி ஐந்து மொழிகளில் வெளியானது. படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமிருந்தது. அதனை படம் பூர்த்தி செய்யவில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு. ஆனால், ரசிகர்கள் திரளாக திரையரங்குக்கு சென்று படத்தைப் பார்த்து வருகிறார்கள். யூடியூபில் உள்ள தெலுங்குப் படங்களின் இந்தி டப்பிங்குகள் வழியாக அல்லு அர்ஜுன் வடஇந்திய ரசிகர்களும் பரிட்சயமானதால் படத்தின் இந்திப் பதிப்பின் வசூலை அனைவரும் ஆவலாக எதிர்பார்த்திருந்தனர்.

Also Read : ‘96‘ ஜானுவின் லேட்டஸ்ட் வைரல் போட்டோ ஷூட் ..

முதல் நாள் வெள்ளிக்கிழமை புஷ்பா இந்திப் பதிப்பு 3 கோடிகளை வசூலித்தது. மகாராஷ்டிராவில் இன்னும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது முக்கியமானது. இரண்டாவது நாள் சனிக்கிழமை வசூல் 4 கோடிகளாக அதிகரித்தது. மூன்றாவது நாயான ஞாயிறு அதிகபட்சமாக 5 கோடிகளை படம் வசூலித்துள்ளது. முதல் வார இறுதியில் புஷ்பாவின் இந்தி டப்பிங் மட்டும் 12 கோடிகளை வசூலித்துள்ளது.



படத்தின் சண்டைக் காட்சிகள் பாராட்டைப் பெற்றுள்ளதால் வார நாள்களிலும் படம் கணிசமான வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : 28 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ரஜினி - இளையராஜா கூட்டணி?



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Allu arjun

அடுத்த செய்தி