ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மாஸ்டர், அண்ணாத்த வசூல்களை முறியடித்த அல்லு அர்ஜுனின் புஷ்பா!

மாஸ்டர், அண்ணாத்த வசூல்களை முறியடித்த அல்லு அர்ஜுனின் புஷ்பா!

புஷ்பா

புஷ்பா

புஷ்பா முதல் மூன்று தினங்களில் உலக அளவில் 173 கோடிகளை வசூலித்து இந்த வருடம் வெளியான இந்தியத் திரைப்படங்களில் முதல் இடத்தைப் பிடித்திருப்பதாக அறிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

விஜய்யின் மாஸ்டர், ரஜினியின் அண்ணாத்த, அக்ஷய் குமாரின் சூர்யவன்ஷி படங்களின் வசூலை அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் முறியடித்திருப்பதாக அறிவித்துள்ளனர்.

இரு பாகங்கள் கொண்ட புஷ்பா படத்தின் முதல் பாகம், புஷ்பா தி ரைஸ் டிசம்பர் 17 வெளியானது. படம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. என்றாலும் படத்துக்கு கூட்டம் குறையவில்லை. ஐந்து மொழிகளிலும் படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. வெளிநாடுகளிலும் வசூலுக்கு குறைவில்லை.

புஷ்பா முதல் மூன்று தினங்களில் உலக அளவில் 173 கோடிகளை வசூலித்து இந்த வருடம் வெளியான இந்தியத் திரைப்படங்களில் முதல் இடத்தைப் பிடித்திருப்பதாக அறிவித்துள்ளனர். தெலுங்கு மாநிலங்களில் புஷ்பா படத்தின் ஓபனிங்கே அல்லு அர்ஜுன் படங்களில் அதிகபட்சமான ஓபனிங் ஆகும். அதே போல் தமிழ்நாடு, கேரளாவிலும் புஷ்பா படமே அல்லு அர்ஜுன் படங்களில் அதிகம் வசூலித்திருக்கும் படம். வடஇந்தியாவில் புஷ்பாவின் இந்திப் பதிப்பு வெளியாகி முதல் 3 தினங்களில் 12 கோடிகளை வசூலித்துள்ளது. அல்லு அர்ஜுனின் படம் தெலுங்கில் வெளியாகும் அதேநாள் இந்தியில் வெளியானது இதுவே முதல்முறை. முதல் படத்திலேயே அசாதாரணமான வசூலை படம் பெற்றுள்ளது.

Allu Arjun Pushpa broke Vijay Master Rajinikanth Annaatthe collections, Allu Arjun Pushpa, pushpa collection, pushpa movie collection, Allu Arjun, Allu Arjun Pushpa trailer, pushpa movie download, pushpa movie download tamilrockers, pushpa release date in india, pdisk pushpa movie, pushpa movie story, pushpa movie villain name, pushpa movie download ibomma, pushpa 2 release date, pushpa movie, pushpa movie trailer, புஷ்பா திரைப்படம், புஷ்பா ட்ரைலர், புஷ்பா டவுன்லோடு, புஷ்பா வில்லன், புஷ்பா ரிலீஸ் தேதி, allu arjun wife, allu arjun family, allu arjun father, allu arjun age, allu arjun pushpa, allu arjun twitter, allu arjun daughter, allu arjun brother, அல்லு அர்ஜுன், நடிகர் அல்லு அர்ஜுன் படங்கள்
அல்லு அர்ஜுன்

முதல் பாகம் வெற்றி பெறுகையில் இரண்டாவது பாகத்துக்கான எதிர்பார்ப்பு கூடும். அதே போல் வசூலும், பாகுபலியிலும் அதேதான் நடந்தது. புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தை அடுத்த வருடம் வெளியிடுகின்றனர். அப்போது முதல் பாகத்தைத் தாண்டி அது வசூலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Thalapathy Vijay, Allu arjun, Rajinikanth