Home /News /entertainment /

வசூலில் சாதனை படைத்த புஷ்பாவின் இந்திப் பதிப்பு!

வசூலில் சாதனை படைத்த புஷ்பாவின் இந்திப் பதிப்பு!

புஷ்பா

புஷ்பா

புஷ்பா படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முதல்வார இறுதியில் 12.68 கோடிகளை வசூலித்த இப்படம் மூன்றாவது வார இறுதியில் 15.85 கோடிகளை வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.

புஷ்பா படத்தின் இந்திப் பதிப்பு வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. முதல்வார இறுதியில் இப்படம் வசூலித்ததைவிட மூன்றாவது வார இறுதியில் இப்படம் அதிகம் வசூலித்துள்ளது.

பான் - இந்தியா திரைப்படத்துக்கு சரியான உதாரணமாக அமைந்திருக்கிறது புஷ்பா. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடித்திருக்கும் சுகுமாரின் இந்தப் படம் டிசம்பர் 17-ம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. தமிழில் கடந்த ஞாயிற்றுக் கிழமை வரை 26 கோடிகள் வசூலித்துள்ளது. கேரளாவில் சுமார் 13 கோடிகளை வசூலித்துள்ளது. இந்தியில் ஞாயிற்றுக்கிழமை வரை இதன் வசூல் 62.94 கோடிகள்.

இதில் ஆச்சரியமான விஷயம், நாளுக்கு நாள் புஷ்பா படத்தின் வசூல் வடமாநிலங்களில் அதிகரித்து வருகிறது. உதாரணமாக டிசம்பர் 17-ம் தேதி இப்படம் மூன்று கோடிகள் அளவுக்கே (3.33 கோடிகள்) வசூலித்தது. ஆனால், 17-வது நாளான ஜனவரி 2 ஞாயிற்றுக்கிழமை 6.25 கோடிகளை வசூலித்துள்ளது. பொதுவாக நாளாக ஆக படங்களின் வசூல் குறையும். புஷ்பா படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முதல்வார இறுதியில் 12.68 கோடிகளை வசூலித்த இப்படம் மூன்றாவது வார இறுதியில் 15.85 கோடிகளை வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்திப் பதிப்பில் அதிகம் வசூலித்த தென்னிந்திய படங்களில் பாகுபலி 2 முதலிடத்திலும், 2.0 இரண்டாவது இடத்திலும், சாஹோ மூன்றாவது இடத்திலும், பாகுபலி முதல் பாகம் நான்காவது இடத்திலும், புஷ்பா ஐந்தாவது இடத்திலும் உள்ளன. ரோபோ (எந்திரன்), கபாலி, காலா படங்களின் வசூலை முறியடித்து ஐந்தாவது இடத்துக்கு முன்னேறிய புஷ்பா பாகுபலி முதல் பாகத்தின் வசூலையும் இன்னும் சில தினங்களில் முறியடித்து நான்காவது இடத்துக்கு முன்னேறும் என கணித்திருக்கிறார்கள். புஷ்பாவின் இரண்டாவது பாகம் இந்தியில் மேலும் பல சாதனைகளை செய்யும் என்பது நிச்சயம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Allu arjun, Tamil Cinema

அடுத்த செய்தி