ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Pushpa 2: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 அட்டகாச அப்டேட்!

Pushpa 2: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 அட்டகாச அப்டேட்!

புஷ்பா 2

புஷ்பா 2

புஷ்பா தி ரூல் க்ளிம்ப்ஸ் மற்றும் டீசர் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  அல்லு அர்ஜுன் மற்றும் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ள 'புஷ்பா தி ரூல்' திரைப்படம், 2021-ல் வெளியான 'புஷ்பா தி ரைஸ்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது. இயக்குநர் சுகுமார் இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

  சமீபத்திய தகவல்களின்படி, படக்குழு தற்போது பாங்காக் காடுகளில் ஒரு தீவிர காட்சியை படமாக்குகிறதாம். இப்படம் புஷ்பா 2 முதல் பாகத்தை விட பிரமாண்டமாக உருவாகவுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில், ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டீசரை விரைவில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம் படக்குழுவினர்.

  முன்னாள் கணவர் சாண்டியின் வீட்டுக்கு திடீர் விசிட் செய்த காஜல்!

  புஷ்பா தி ரூல் க்ளிம்ப்ஸ் மற்றும் டீசர் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 16-ஆம் தேதி வெள்ளித்திரையில் வெளியாகவிருக்கும் ஜேம்ஸ் கேமரூனின் பிரம்மாண்டமான படமான 'அவதார் 2: தி வே ஆஃப் வாட்டர்' படத்துடன் புஷ்பா 2 ப்ரோமோ இணைக்கப்பட்டு திரையரங்குகளில் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Allu arjun