ஒரு படம் திருப்திகரமாக முடியும் போது அதில் நடித்த பிரதான நட்சத்திரங்கள் படக்குழுவினருக்கு பரிசுகள் அளிப்பதுண்டு. பெரும்பாலும் இந்தப் பரிசு ஒருவேளை பிரியாணியாக இருக்கும். சிலநேரம் பார்ட்டி நடத்துவார்கள். கைக்கடிகாரம், ஆடைகள் போன்றவை பரிசளிப்பதும் உண்டு. அரிதாக ஏதேனும் நடிகர் தங்கத்தில் மோதிரம் பரிசளிப்பார். விஜய் அவ்வாறு பரிசளித்துள்ளார்.
ஆனால், தலா ஒருவருக்கு பத்து கிராம் தங்கம் பரிசளிப்பது இதுவே முதல் முறை.தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன்தான் அந்த கொடையாளி. அவர் நடித்திருக்கும் புஷ்பா இரண்டு பாகங்களாக வெளியாகிறது. முதல் பாகம் டிசம்பர் 17 தமிழ் உள்பட 5 மொழிகளில் திரைக்கு வருகிறது. பாடல், சண்டைக் காட்சிகளில் மொத்த யூனிட்டும் 100 சதவீத உழைப்பை வழங்கியுள்ளது. அல்லு அர்ஜுன் உள்பட படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இது முக்கியமான திரைப்படம்.
also read : பீஸ்ட் குழுவினருக்கு டாட்டா சொன்ன பூஜா ஹெக்டே... வைரலாகும் வீடியோ
புஷ்பா படப்பிடிப்பில் பங்கேற்றவர்களுக்கு பத்து கிராமில் தங்க மோதிரம் பரிசளித்துள்ளார் அல்லு அர்ஜுன். சுமார் 40 பேர்களுக்கு இப்படி தங்கம் பரிசளித்துள்ளார். இது தவிர தயாரிப்பு தரப்பில் பணியாற்றியவர்களுக்கு பத்து லட்சம் அளித்துள்ளார்.
புஷ்பா படத்தின் ட்ரெய்லர் கடந்த 6 ஆம் தேதி வெளியாகி குறுகிய காலத்தில் 2 கோடி பார்வைகளை பெற்றது. இன்று சமந்தா நடிப்பில் தயாரான பாடலை வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்துக்காக சமந்தா முதல்முறையாக ஒரு பாடலுக்கு ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Allu arjun