டிசம்பர் 17-ம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான புஷ்பா அனைத்து மொழிகளிலும் வெற்றியடைந்தது.
குறிப்பாக இந்திப் பதிப்பு 90 கோடிகள் அளவுக்கு வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த வெற்றி காரணமாக அல்லு அர்ஜுனின் புஷ்பாவுக்கு முந்தைய வெற்றிப் படம் ஒன்றை ஜனவரி 26 ஆம் தேதி இந்தி மொழியில் டப் செய்து திரையரங்கில் வெளியிடுகின்றனர்.
புஷ்பா திரைப்படத்தின் கமர்ஷியல் அம்சங்கள் ரசிகர்களுக்கு பிடித்திருந்தன என்பதைத் தாண்டி இந்தி பேசும் ரசிகர்களுக்கு இந்தி டப்பிங் மூலமாக அல்லு அர்ஜுன் ஏற்கனவே அறிமுகமாகியிருந்தார். அவரது இந்தி டப்பிங் திரைப்படங்கள் யூடியூபில் அதிக பார்வையாளர்களை தொடர்ந்து பெற்று வருகின்றன. இதனால், புஷ்பா இந்திப் பதிப்புக்கு அதிகம் விளம்பரம் செய்யாமலே இந்தி பேசும் ரசிகர்களை படம் சென்றடைந்தது. படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுனின் வெற்றிப் படம் ஒன்றை இந்தியில் டப் செய்து திரையரங்குகளில் வெளியிடுகின்றனர்.
2020 ஜனவரி 12 சங்கராந்தியை முன்னிட்டு வெளியான படம் ஆல வைகுந்தபுரமுலு. அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, ஜெயராம், தபு, சமுத்திரகனி நடித்திருந்த இந்தப் படத்தை த்ரிவிக்ரம் இயக்கியிருந்தார்.
படம் பம்பர் ஹிட்டானது. இத்தனைக்கும் அரதப்பழைய கதை இது. முதலாளியின் குழந்தை, தொழிலாளியிடமும், தொழிலாளியின் குழந்தை முதலாளியிடமும் வளர்கிறது. பொதுவாக இதுபோன்ற கதையில் உண்மை வெளிப்படுவதே கிளைமாக்ஸாக இருக்கும்.
மோடியை விமர்சித்த தனியார் தொலைக்காட்சி பொது மன்னிப்பு கோர வேண்டும் - பாஜக வலியுறுத்தல்
ஆல வைகுந்தபுரமுலு படத்தில் கடைசி வரை முதலாளி ஜெயராமுக்கும், அவர் மனைவி தபுக்கும் தங்களின் உண்மையான மகன் அல்லு அர்ஜுன் என்பது தெரியாது. த்ரி விக்ரம் தனது வழக்கமான
பேமிலி சென்டிமெண்டுடன் படத்தை தந்ததில் படம் பம்பர் ஹிட்டானது.
பிளாக் சாரி.. இடுப்பு போஸ்... ரம்யா பாண்டியனை பார்த்து வாய் பிளந்த பிரேம்ஜி!
இந்தப் படத்தை தான் ஜனவரி 26-ஆம் தேதி இந்தியில் டப் செய்து திரையரங்குகளில் வெளியிடுகின்றனர். அல்லு அர்ஜுனின் பெரும்பாலான படங்களை இந்தியில் டப் செய்து யூடியூபில் வெளியிட்டிருக்கும் கோல்ட் மைன்ஸ் நிறுவனமே ஆல வைகுந்தபுரமுலு படத்தின் இந்தி வெளியீட்டிற்கும் பின்புலமாக உள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.