அல்லு அர்ஜுன் நடிப்பில் சூப்பர் ஹிட்டான புஷ்பா திரைப்படம் ரஷ்யாவில் வெளியிடப்படவுள்ளது. இதையொட்டி, படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில், தேவிஸ்ரீபிரசாத் இசையில் உருவான புஷ்பா திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. செஞ்சந்தனம் மரங்களை வெட்டும் கூலித் தொழிலாளியாக தொடங்கி, மிகப்பெரிய கடத்தல் தாதாவாக அல்லு அர்ஜுன் உருவாகுவது முதல் பாகத்தில் இடம்பெற்றிருக்கும்.
வேற லெவல் கவர்ச்சியில் நடிகை ஜான்வி கபூர்..! வைரல் போட்டோஸ்..
விறுவிறுப்பான காட்சிகள், மிரட்டலான வில்லன்கள், அதிரடியான பாடல்கள் மனதை ஈர்க்கும் காதல் காட்சிகள் என புஷ்பா திரைப்படம் மிகச்சிறப்பான கமர்சியல் திரைப்படமாக வெளியானது. படத்தின் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவிற்கு குறிப்பிடத்தகுந்த காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
சமந்தா ஆடிய ஊ சொல்றியா பாடல் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. வில்லன்களாக பகத் பாசில், தனஞ்செய், சண்முக், சுனில், அனுசுயா பரத்வாஜ் அஜய் கோஸ் உள்ளிட்டோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.
பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு சம்பளத்தை உயர்த்திய ஐஸ்வர்யா லெக்ஷ்மி?
புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன் தனது சாம்ராஜ்யத்தை எவ்வாறு விரிவுபடுத்தினார் என்பது குறித்த காட்சி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
#PushpaTheRise Russian language trailer out now 💥
- https://t.co/cAVcohoJtO
Special premieres with team on Dec 1st at Moscow & Dec 3rd at St. Petersburg.#PushpaInRussia from Dec 8th 🔥
Icon Star @alluarjun @iamRashmika @aryasukku @ThisIsDSP @4SeasonsCreati1 pic.twitter.com/XWcEOIQ8dt
— Mythri Movie Makers (@MythriOfficial) November 29, 2022
இந்நிலையில் ரஷ்யாவில் அந்நாட்டு மொழியில் புஷ்பா திரைப்படம் அடுத்த மாதம் 8ஆம் தேதி ரிலீஸாகிறது. இதையொட்டி படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.
ரஷ்யாவில் இந்தப் படம் ரிலீஸாகவுள்ளதை முன்னிட்டு, படக்குழுவினர் அடுத்த மாதம் ரஷ்யாவில் புரொமோஷன் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Allu arjun