ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

லைக்ஸை குவிக்கும் அல்லு அர்ஜுன் லேட்டஸ்ட் புகைப்படம்!

லைக்ஸை குவிக்கும் அல்லு அர்ஜுன் லேட்டஸ்ட் புகைப்படம்!

அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன் தனது ஒவ்வொரு படத்திற்கும் தனது தோற்றத்தை மாற்றிக் கொள்வதில் பெயர் பெற்றவர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நடிகர் அல்லு அர்ஜூன் வெளியிட்ட பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

புதிய படமாக இருந்தாலும் சரி, புதிய தோற்றமாக இருந்தாலும் சரி அல்லது போட்டோஷூட்டாக இருந்தாலும் சரி நடிகர் அர்ஜுன் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, பிஸியாக இருப்பார். தற்போது அவர் தனது சமூக வலைதளங்களில் ஒரே வண்ணமுடைய (மோனோகுரோம்) படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில் புதிய தோற்றத்தில் மிகவும் சீரியஸான எக்ஸ்பிரஷனில் காணப்படுகிறார் அல்லு அர்ஜுன். அதோடு படத்திற்கு கறுப்பு நிற இதய எமோஜியை கேப்ஷனாக பதிவிட்டுள்ளார்.

இறுதியாக புஷ்பா படத்தில் நடித்திருந்த அல்லு அர்ஜுன், அதன் அடுத்த பாகமான புஷ்பா: தி ரூல் படத்தில் நடிக்கிறார். தற்போது விடுமுறையில் இருக்கும் அல்லு அர்ஜுன், விடுமுறை முடிந்து திரும்பியதும் புஷ்பா 2-வின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவார் என்று கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் தனது ஒவ்வொரு படத்திற்கும் தனது தோற்றத்தை மாற்றிக் கொள்வதில் பெயர் பெற்றவர்.

நயன்தாரா பெரிய நடிகையா? சர்ச்சைக்குள்ளாகும் பாலிவுட் பிரபலத்தின் கருத்து

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர் நடிப்பில் வெளியான ஆர்யா 2 (2009), S/O சத்தியமூர்த்தி மற்றும் ருத்ரமாதேவி (2015), சர்ரைனோடு (2016), DJ: துவ்வாடா ஜகன்னாதம் (2017) மற்றும் அல வைகுந்தபுரமுலு (2020) போன்ற பல படங்கள் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Allu arjun