1982 ஆம் ஆண்டு
சென்னையில் பிறந்தவர் அல்லு அர்ஜுன். சிரஞ்சீவியின் நெருங்கிய உறவினரான தயாரிப்பார் அல்லு அரவிந்தின் மகனாக பிறந்ததால் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு எளிதாக அமைந்து விட்டது. குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களிலும் பாடலிலும் தோன்றியவர் கங்கோத்ரி திரைப்படத்தின் மூலம் முழுநேர நாயகனாக உருவெடுத்தார்.
முதல் திரைப்படத்தில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் ஆர்யா திரைப்படம் அல்லு அர்ஜுனுக்கான அடையாளத்தை உருவாக்கி கொடுத்தது. துருதுருவென ஒரு இடத்தில் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் அல்லு அர்ஜுனின் நிஜமான மனோபாவத்துடன் ஆர்யா படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் பொருந்திப் போனதால் ரசிகர்கள் அல்லு அர்ஜுனை அப்படியே ஏற்றுக் கொள்ளத் தொடங்கினார்கள்.
அல்லு அர்ஜுன் திரைவாழ்க்கையில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இயக்குனர் சுகுமாரின் நட்பும் ஆர்யா திரைப்படத்தின் வாயிலாகவே கிடைத்தது. Bunny மற்றும்,happy என அடுத்தடுத்த திரைப்படங்களில் தனது நடிப்புக்கும் நடனத்திற்கும் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் ஒரு வெற்றி திரைப்படத்தை ஆர்யா திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தின் மூலம் பரிசளித்தார் இயக்குனர் சுகுமார். நட்பு காதல் என அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்த கிடைத்த ஒரு கச்சிதமான வாய்ப்பில் மிஸ்டர் பெர்பெக்ட் ஆக மாறினார் அல்லு அர்ஜுன். மேலும் இந்த திரைப்படத்தில் இடம் பிடித்த ரிங்கா ரிங்கா பாடல் பட்டி தொட்டி எங்கும் அல்லு அர்ஜுனை கொண்டு சேர்த்தது.
.தொடர்ந்து வருடு, எவடு, சரைனோடு என அடுத்தடுத்து வெற்றிகளால் அல்லு அர்ஜுனின் மார்க்கெட் உச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. திரி விக்ரம் குமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த அலா வைகுந்தபுரமுலோ திரைப்படம் அல்லு அர்ஜுனுக்கு உச்சத்துக்கு இட்டுச் சென்றது. இந்த படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்ம பாடல் ஒட்டுமொத்த தேசத்திற்கும் அல்லு அர்ஜுனை அடையாள அடையாளம் காட்டியது. கேரளாவிலும் இவருக்கு ஒரு பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது.
ரியாக்ஷன்களால் ரசிகர்களை கவரும் எக்ஸ்பிரஷன்ஸ் குயின் ராஷ்மிகா மந்தனா!
தமிழ் தெலுங்கு ஹிந்தி என ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியான புஷ்பா அல்லு அர்ஜுனை PAN இந்தியா நாயகனாக்கியது. அழுக்குச் சட்டையுடன் வளர்ந்த தாடியுடனும் செம்மரக்கடத்தல் காரனாக நடித்த அவரின் உடல்மொழி உலகம் முழுவதும் பல ரசிகர்களை பெற்றது.
இந்தியாவின் மிகவும் ஸ்டைலிஷான நடிகர்களில் ஒருவராக அறியப்படும் அல்லு அர்ஜுன் அழுக்குச் சட்டை மற்றும் அடர்ந்த தாடியுடன் நடித்தாலும் தன்னால் சாதிக்க முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை தோள்பட்டையை சாய்த்து சிரித்துக்கொண்டே காட்டுகிறார் அல்லு அர்ஜுன்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.