அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பாவுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ஆல வைகுந்தபுரமுலு. இதன் இந்தி டிஜிட்டல் மற்றும் டப்பிங் உரிமைகளை கோல்ட் மைன்ஸ் நிறுவனத்தினர் வாங்கியிருந்தனர்.
புஷ்பா படத்தின் இந்திப் பதிப்பு தாறுமாறாக ஹிட்டாக, கோல்ட் மைன்ஸ் நிறுவனத்தினர் ஆல வைகுந்தபுரமுலு படத்தின் இந்திப் பதிப்பை ஜனவரி 26 திரையரங்குகளில் வெளியிடுவதாக அறிவித்தனர். இது இந்தித் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம், ஆல வைகுந்தபுரமுலு படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸை வாங்கி அதனை இந்தியில் படமாக்கி வருகின்றனர். அல்லு அர்ஜுன் நடித்த வேடத்தில் கார்த்திக் ஆர்யனும், பூஜா ஹெக்டே நடித்த வேடத்தில் க்ருத்தி சனானும், தபு நடித்த வேடத்தில் மனிஷா கொய்ராலாவும் நடித்து வருகின்றனர். ரோஹித் தவான் படத்தை இயக்கி வருகிறார்.
இதையும் படிங்க.. சிக்கியது ஆதாரம்.. தமிழ் - சரஸ்வதி கல்யாணம் நடக்க வாய்ப்பு இல்லை!
ஆல வைகுந்தபுரமுலு படத்தின்
இந்தி டப்பிங் திரையரங்குகளில் வெளியானால் அதன் இந்தி ரீமேக் கடுமையாகப் பாதிக்கப்படும். அதன் பிறகு அப்படத்தை ரீமேக் செய்து பலனில்லை. ஏற்கனவே படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இறுதிக்கட்டத்தில் இருப்பதால் போட்ட காசு முழுவதும் கரியாகிவிடும் நிலை.
இதையும் படிங்க.. கடைசியில் இதுதான் உங்க ட்விஸ்டா? கையெடுத்து கும்பிட்ட கண்ணம்மா!
இதனைத் தொடர்ந்து
ஆல வைகுந்தபுரமுலு படத்தை இந்தியில் ரீமேக் செய்து வந்தவர்கள் கோல்ட் மைன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து கோல்ட் மைன்ஸ் நிறுவனம் ஆல வைகுந்தபுரமுலு படத்தின் இந்தி டப்பிங்கை திரையரங்கில் வெளியிடும் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது. இதனை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஆல வைகுந்தபுரமுலு படத்தின் இந்தி ரீமேக்குக்கு Shehzada என பெயர் வைத்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.