ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தமிழ் சினிமாவில் கடந்த வாரம் வெளியான அனைத்து படங்களும் படுதோல்வி

தமிழ் சினிமாவில் கடந்த வாரம் வெளியான அனைத்து படங்களும் படுதோல்வி

கடந்த வாரம் வெளியான படங்கள்

கடந்த வாரம் வெளியான படங்கள்

தமிழ் சினிமாவின் கடந்த வாரம் வெளியான அனைத்து படங்களும் படுதோல்வியை சந்தித்துள்ளன

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் சினிமாவில் கடந்த வாரம் வெளியான அனைத்து படங்களும் படுதோல்விளை சந்தித்துள்ளன. 

கடந்த 23-ம் தேதி தமிழில் அதர்வா நடித்த ட்ரிகர், வைபவ் நடித்த பபூன், கருணாஸ் தயாரித்து நடித்த ஆதார் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின. இந்த மூன்று திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற தவறிவிட்டன. இதன் காரணமாக இந்தப் படங்களுக்கு ரசிகர்களின் வருகை மிக குறைந்த அளவில் இருக்கிறது என திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக தங்கள் படங்களை திரையரங்குகளில் திரையிட கியூப் நிறுவனத்திற்கு தயாரிப்பாளர் செலுத்திய VPF  கட்டணத்தை கூட திரும்பப் பெற முடியாத சூழல் உள்ளதாக திரைத்துறையில் கூறுகின்றனர். இதனால் ட்ரிகர், ஆதார், பபூன் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்துள்ளன.

பிறைநிலவு மறையும் முன்னே முழுநிலவாய் வந்து நிற்பார் - ஐஸ்வர்யா ராயை பாராட்டிய பார்த்திபன்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் பொன்னியின் செல்வன் மற்றும் 29-ம் தேதி வெளியாகும் நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் பெரும் வசூலை எடுக்கும் என கூறுகின்றனர். அதில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

Published by:Shalini C
First published:

Tags: Tamil Cinema