கொரோனாவிலிருந்து மீண்டதும் காதலருடன் மாலத்தீவு சென்ற ஆலியா பட்!

ரன்பீர் கபூர் - ஆலியா பட்

கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஆலியா பட் தனது காதலர் ரன்பீர் கபூருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். முன்னதாக அவரும் கொரோனாவிலிருந்து மீண்டது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
    கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஆலியா பட் தனது காதலர் ரன்பீர் கபூருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். முன்னதாக அவரும் கொரோனாவிலிருந்து மீண்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகை ஆலியா பட், திங்கட்கிழமை மாலத்தீவுக்கு சென்றார். விடுமுறையை கழிக்க சென்ற அவருடன் காதலர் ரன்பீர் கபூர் உடன் இருந்தார். திங்கள்கிழமை காலை, மும்பை விமான நிலையத்தில் இந்த ஜோடி கேமரா கண்ணில் பட்டது.

    கொரோனா வைரஸிலிருந்து இருவரும் மீண்ட பிறகு இவர்கள் முதல் முறையாக ஒன்றாக சுற்றுலா சென்றனர். இருவரும் வெள்ளை நிற உடையில் காட்சியளித்தனர். ’மக்கள் கொரோனா தொற்றால் அவதிப்படும் போது, நீங்கள் விடுமுறையை கழிக்கச் செல்கிறீர்களா’ என ஆலியா - ரன்பீரின் மாலத்தீவு பயணம் குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

    இதற்கிடையே கடந்த வருடமே ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கொரோனா தொற்று, காரணமாக திருமணம் தள்ளி போயிருக்கிறது. நடிகை ஆலியா பட் தற்போது ‘கங்குபாய் கத்தியவாடி’, ‘டக்த்’ ஆகிய இந்திப் படங்களில் நடித்து வருகிறார். இது தவிர ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவுக்கும் அறிமுகமாக உள்ளார். தவிர அவரது காதலன் ரன்பீர் கபூருடன் இணைந்து முதல் முறையாக ‘பிரம்மாஸ்த்ரா’ என்கிற படத்தில் இணைந்து நடிக்கிறார். இப்படத்தில் அமிதாப், நாகார்ஜுனா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: